தேவனால் அருளப்பட்ட பாதை GOD'S PROVIDED WAY 59-04-15 தமிழாக்கம் சகோ. S. A. ஜெபகுமார் வில்லியம் மரியன் பிரன்ஹாம் தேவனால் அருளப்பட்ட பாதை GOD'S PROVIDED WAY லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா (சபையார் விசுவாசிக்க மாத்திரம் செய் பாடலைப் பாடி அதன்பிறகு ஆராதிக்கிறார்கள்) இன்னும் ஆவியில் ஆராதனை செய்யும் சில சபைகளில் ஒன்றில் இருக்கும்படியான சிலாக்கியத்திற்காக இந்தப் பிற்பகல் வேளையில் நான் நிச்சயமாகவே சந்தோஷமாயிருக்கிறேன். தேவனுடைய ஆவி அப்படியே பாய்ந்து செல்ல விடும்படியாக அந்த ஆறுதலை அப்படியே உணரும்படிக்கு இங்கே வருவது என்பது அப்படியே அற்புதமாயிருக்கிறது என்று நினைக்கிறேன். 2. கர்த்தருடைய அந்த இன்னிசைகளை, ஜனங்கள் ஆவியினாலே அசைகையில் அவர்களுடையதைப் போன்ற தாளத்தை ஒலிநாடாவில் பெற்றுக் கொள்ளும்படிக்கு இங்கே என்னுடைய ஒலிநாடா பையன் எனக்கிருக்கிறான். நான் அதை ஒரு நோக்கத்திற்காகவே கொண்டிருந்தேன். அதற்காக வரும்படி நான் அவனிடம் கேட்டுக் கொண்டேன். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்திலே இந்தப் பிற்பகல் வேளையில் மறுபடியும் சம்பவிக்கும்படி கர்த்தர் அனுமதித்தார் என்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். 3. இப்பொழுது, ஜமைக்காவிலிருந்து வந்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசிக்கும்போது, நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன் ஸ்மித் அவர்கள் மிகவும் கருணையுடன் அதைச் செய்திருக்கிறார், இரண்டு கடிதங்கள்... நாங்கள் அங்கேயிருந்த போதுள்ளதைக் குறித்து அப்படியே எனக்கு ஞாபகப்படுத்துகிறது. ... நீங்கள் அறிந்திருக்கலாம். (விசுவாசத்தின் நம்பிக்கை (The Herald of Hope) பத்திரிகையா, அது தானா... உங்களுடைய பத்திரிகையின் பெயர் என்ன?) 'நம்பிக்கையின் தூதன்.' நாங்கள் ஜமைக்காவில் அதைக் கொண்டிருந்தோம் என்பதைக் குறித்து மிகப்பெரிய விளம்பர வேலைகளில் ஒன்றை அந்தப் பத்திரிகை செய்தது. அந்த-அந்தப் பத்திரிகையின் நிமித்தமாக அந்தத் தீவிலே எந்த நபரைக் காட்டிலும் சகோதரன் ஸ்மித் அவர்கள் நன்றாக - அதிகமாக அறியப்பட்டிருந்தார். உங்களுடைய பத்திரிகை யானது மகத்தான செல்வாக்கை உடையதாயிருக்கிறது, அது எவ்விடத்திற்கு போனாலும் கர்த்தருக்காக ஒரு-ஒரு-ஒரு மகத்தான காரியத்தை கொண்டு செல்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு, நான் என்னுடைய கரத்தில் அதை வைத்திருந்தேன், காரணம் அது எனக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது நிச்சயமாகவே ஒரு முதன்மை வாய்ந்த பத்திரிகையாகும். தேவன் தாமே அதை பூமியின் நான்கு மூலைக்கும் பிரயாணம் செய்யும்படி விட்டு மகத்தான கிரியையை செய்வாராக. 4. இந்தச் சபை நீண்டகாலம் ஜீவிப்பதாக, ஆவியானவர் இதை விட்டு ஒருபோதும் விலகாதிருப்பாராக. உலகத்தின் காரியங்களோடு ஒருபோதும் சமரசம் செய்ய வேண்டாம். அதைக் காத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஆறுபேரே மீதமுள்ளவர்களாக இருந்து நீங்கள் மிகவும் ஏழைகளாக இருக்க வேண்டியிருக்குமானால், சரியாக அந்த ஆவியோடு கூட தரித்திருங்கள். புரிகிறதா? அப்படியே அதை தரித்திருக்க விடுங்கள்... சரியாக அந்த ஆராதனையோடு அப்படியே தரித்திருங்கள். 5. இன்று நாம் மிக அதிகமான வித்தியாசமான திட்டங்களையும், மிக அதிகமான விளம்பரங்களையும், அப்படியே நேரத்தை எடுத்துக் கொள்கிற மிக அதிகமானவற்றையும் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். அது ஆராதனையைக் குறித்துள்ள அந்த உணர்வுகளை அகற்றிவிடுகிறது. ஆனால் நான் சகோதரன் மெர்சியர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன், நான், 'அப்படியே... உங்களால் அப்படியே இளைப்பாற முடியும். அப்படியே எந்த முயற்சியும் செய்ய வேண்டாம், அப்படியே-அப்படியே அது ஏதோவொன்று... போன்று உணருங்கள்' என்று கூறினேன். அப்படியே இதைப்போன்ற இடங்களுக்குள் பிரவேசிப்பது என்பது இந்த பதற்றமுள்ள நரம்புக்கோளாறுக்கு உட்பட்ட உலகத்திற்கு நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அப்படியே அமைதிப்படுத்தும்படியாக, அவர்கள் சுகமடையும்படியாக அது இருக்கும். 6. இன்று எனக்கு மிகவும் பயங்கரமான ஒரு நாளாக இருந்து வருகிறது, மிக அநேக அழைப்புகளும் மற்றவைகளும் இருந்து வருகிறது, தொலைபேசிகள் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்றும்... நான் இங்கே நடந்து வந்த போது, சகோதரன் மெர்சியர் அவர்கள், 'நீர் பதற்றமுள்ளவராக இருக்கிறீர் என்று என்னால் கூற முடியும்' என்றார். அதற்கு நான், 'யார் அவ்வாறு இருக்க மாட்டார்கள்' என்று கூறினேன். 7. ஆனால் இப்பொழுது, நான் அமைதியாக இருக்கிறேன். அப்படியே பாடிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டும் இருக்கிறேன், நான்-நான் அப்படியே அதை நேசிக்கிறேன். நாம் அப்படியே, 'ஆமென்' என்று கூறிவிட்டு வீட்டிற்குப் போக வேண்டுமானால், கர்த்தர்... என்று உணருகிறேன். இங்கே இந்த அற்புதமான சூழ்நிலையில் இருக்கும்படிக்கு நம் ஒவ்வொருவருக்கும் அது செய்துவிடும். 8. மீதியாக இருக்கும் சிலரில் ஒருவராக இது இருக்கிறது. அவர்கள் என்னிடம் கூறுகிறபடி, எல்லா பெந்தெகோஸ்தே ஆராதனையும் வழக்கமாக, அது வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போன்றே இருக்கின்றன. அது திரும்பி வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நாம் அந்த பழைய பாதைக்கு, அப்படியே ஆவியானவர் நிரப்பும்படியாக சட்டப்பூர்வமான உரிமையைக் கொண்டிருக்கிற இடத்திற்கு, திரும்பிப் போவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். நான் அதை நேசிக்கிறேன். 9. நீங்கள் கவனித்தீர்களா, அது யாராக இருந்தாலும், அவர்கள் என்ன செய்தியைக் கொண்டிருந்தாலும், பரவாயில்லை, எல்லாரும் கவனம் செலுத்துகிறார்கள் (பாருங்கள்?), அப்படியே... சிலசமயங்களில் அவர்கள் சபையில் கண்டு... என்று எண்ணிக்கொள்வார்கள். ஒருக்கால் யாரோ ஒரு நபர், 'அது ஆவியானவருடையது அல்ல' என்று கூறிக்கொண்டு, அப்படியே அது தொடர்ந்து போகும்படி விட்டு விடுவார்கள். ஆனால் அது-அது சகோதரன் ஸ்மித் அவர்களோடு அவ்வாறு இல்லை. அவர் அப்படியே... அது யாராக இருந்தாலும், அவர் அப்படியே என்ன... அனுமதிக்கிறார். அது கர்த்தராக இருக்குமானால், அது கர்த்தராக இருக்கிறது. அது அவ்வாறு இல்லை என்றால், அது எப்படியும் எதற்கும் மதிப்பில் சமமாக இருப்பதில்லை. எனவே அவர் அப்படியே... எனக்கு-எனக்கு-எனக்கு அது பிடிக்கும். நான் அதை விரும்புகிறேன். அது உணர்வுகளை புண்படுத்துவதில்லை; சற்று நேரத்திற்கு முன்பு, யாரோ ஒருவர் பேசின தீர்க்கதரிசன வார்த்தையானது, அது அப்படியே அன்பைக் கொண்டு வருகிறது. அது அப்படியே எல்லாரும் வீட்டில் இருப்பதாக உணரும்படி செய்கிறது. பாருங்கள்? அது உண்மையாகவே அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது அந்தவிதத்தில் இருப்பது ஒருபோதும் நின்றுபோகாமல் இருப்பதாக என்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. 10. நிறைய நேரங்களில் நான் இங்கே உள்ளே வந்து அப்படியே இளைப்பாற விரும்புகிறேன். நான் இங்கே வந்து இவ்விதமாக சற்றுநேரம் அப்படியே இளைப்பாற விரும்புகிறேன். நான் இப்பொழுது அதை ஒலிநாடாவில் பெற்றுக்கொண்டேன், எனவே நான் அப்படியே மிகவும் பதற்றமுள்ளவனாக ஆகும்போது, நான் அப்படியே ஒலிநாடாவைப் போட்டு இயக்கி ஓய்வெடுத்துக்கொள்வேன். நான் பிஸ்காவில் இருப்பேன். ஒருக்கால் ஒலிநாடாவால் அதன் தாளத்தை பதிவு செய்ய முடியும், அப்போது தேவன் அதன் ஆவியை கொடுப்பார். நான் மிகவும் நிலைகுலைந்து போனவனாக உணரும்போது, அப்படியே அதைக் கேட்பதற்கு தான் - அதற்கு தான். ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், இன்று ஆவியானவரிடமிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்புவதற்கு மிக அனேக மனக்கிளர்ச்சிகளும் மிக அநேக காரியங்களும் அங்கே உள்ளன. இங்கே இருப்பது என்பது மிகவும் அருமையாக இருக்கிறது. 11. சுகமடைந்தவைகளைக் குறித்த இந்தக் கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். மேலும் நான்... நான் இதைக் கூற விரும்புகிறேன், இது எந்த... இல்லாமல் இருக்கிறது. நாம் வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலிபரப்பிக்கொண்டோ அல்லது ஒளிபரப்பிக் கொண்டோ இல்லை, ஓ. இல்லை, ஊ-ஹø... அது ஒலி அல்லது ஒளிபரப்பப்படவில்லை என்ற நிச்சயமுடையவனாய் இருக்க நான் அப்படியே விரும்பினேன். உங்களுக்குத் தெரியும், நான்-நான் அம்மாதிரியான கடிதங்களை கேட்க விரும்புகிறேன், ஏனென்றால், நீங்கள் பாருங்கள், நான் எந்த தெய்வீக சுகமளிப்பவனும் அல்ல. நான்-நான் அவ்வாறு இருப்பதாக ஒருபோதும் உரிமைகோரினது கிடையாது. காரியங்களைச் செய்வதற்கு எனக்கு எந்த ஆடம்பர வழிகளும் கிடையாது. நான்-நான் அப்படியே... எனக்கு ஜெபத்திற்கு நிறைய பதில் கிடைத்துள்ளன. என்னால் சொல்லக்கூடியது எல்லாம் ஏறக்குறைய அவ்வளவு தான். அப்படியே-அப்படியே... என்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கும்படியாக தேவன் எனக்கு நல்லவராகவே இருந்து வருகிறார். பாருங்கள்? யாராவது ஒருவருக்கு நான் எப்பொழுதாவது செய்தது எல்லாம் அவ்வளவு தான், அவர்களுக்காக வெறுமனே ஜெபிப்பதாக அது இருந்தது. 12. நம்மால் செய்யக்கூடியது எல்லாமே ஏறக்குறைய அவ்வளவு தான் என்று நான்-நான் நினைக்கிறேன், நீரும் அவ்வாறு இல்லையா, சகோதரன் ஸ்மித் அவர்களே, வெறுமனே-வெறுமனே ஜெபிப்பது. அவ்வளவு தான். ஜெபத்திற்கு பதிலளிப்பதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். மேலும் நான்... அப்படியே நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன். நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று கூறுவதாக நான் எதையும் கொண்டிருப்பதில்லை, நான் குறிப்பிட்ட காரியங்களைச் செய்து - எனது கரங்களை உங்கள் மேல் வைக்கும்போது, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் என்று நான் அப்படியே விசுவாசிக்கிறேன். நான் வெறுமனே ஜெபம் செய்கிறேன், அவர்-அவர் தான்... கடிதங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன, அவர்கள் சுகமடைகிறார்கள். எனவே அது சற்று ஏறக்குறைய அதுவாகத்தான் இருக்கிறது. 13. இப்பொழுது, பிஸ்கா சபையின் இந்த ஐக்கியத்தில், இந்தப் பிற்பகல் வேளையில் இந்த கூட்டத்தினரிடம் பேச வேண்டிய சந்தர்ப்பத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இது எல்லாம் அப்படியே எதைக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஊழியக்காரர்களும், வணிகரும், பொதுமக்களும், நாம் எல்லாருமே இங்கே ஒன்றாக இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். 14. எனவே இன்றிரவில், கடந்த இரவு ஏஞ்சலஸ் டெம்பிளில் வைத்து நான் இன்றிரவு என்ன செய்வேன் என்று அறிவிப்பு கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால், நான் இங்கே தாமதமாக இருப்பேன் என்று நினைத்தேன். வழக்கமான... பகுத்தறிதலையோ, அல்லது அதைப்போன்ற மற்றவைகளையோ, நான் எப்படி அழைக்கிறேன் என்றால், நான் வழக்கமாக ஏறக்குறைய மூன்று மணிக்கு ஜெபம் செய்ய செல்கிறேன், அதிலிருந்து இந்த நேரம் வரையிலும் அதற்கு மேலும் எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் இன்றிரவில், நான் எல்லா ஜெப அட்டைகளையும் மேலே எடுத்து, இன்றிரவில் டெம்பிளில் வைத்து வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்வேன் என்றும், வேதவாக்கியத்திலிருந்து ஆபிரகாமின் பேரில் தொடர்ச்சியான செய்திகளை தொடங்குவதாகவும் சொல்லியிருந்தேன். இப்பொழுது, சற்று நேரம் என்னுடைய மூலபாடத்தை எடுப்பதற்கு சற்று முன்பாக, நாம் மறுபடியுமாக சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 15. கர்த்தாவே, இன்று இங்கே உம்முடைய பிரசன்னத்தில் இருப்பதன் மூலமாக நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். தங்களுடைய பிரதிஷ்டையின் மூலமாகவும், தங்களுடைய அன்பின் மூலமாகவும், உம்மிடத்திலுள்ள ஆர்வப்பற்றின் மூலமாகவும் கர்த்தருடைய ஆவி தங்கள் மத்தியில் அசைவாடுவதை காத்துக்கொள்கிற (ந்ங்ங்ல்ள்) மீதியானவர்கள் இன்னும் இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கர்த்தாவே, இந்த சபையை ஆசீர்வதியும். ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டே, நான் இதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்கள் இங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்களை தாழ்மையாக வைத்தருளும்; மேய்ப்பரையும் சக பணியாளர்களையும், அப்படிப்பட்ட ஒரு-ஒரு இடத்தை உருவாக்கும்படியாக எடுத்துக்கொள்கிற எல்லாரையும் ஆசீர்வதியும். நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், அவர்களுடைய பத்திரிகையை ஆசீர்வதியும், அது ஒரு... ஆக இருக்கிறது. அதை வாசிக்கிற மற்றவர்களுக்கு அது ஒரு மகத்தான ஆசீர்வாதமாக இருக்கிறது. செய்து முடிக்கப்படும் எல்லாமே உம்முடைய கனத்துக்கென்றும் மகிமைக்கென்றும் இருப்பதாக. 16. இப்பொழுது, சற்றுநேரம் வார்த்தையின் பேரிலான ஆராதனைக்குப் பிறகே எங்களுடைய சிந்தைகளை அமரப்பண்ணுவோமாக. தேவனே, இது நியாயத்தீர்ப்பின் வீடாக இருக்கிறது, இங்கே இது இருந்தபடியாக, நாங்கள் இந்தப் பழைய கருவாலி மரத்தின் கீழாக வருகிறோம், நாங்கள் இளைப்பாறி, புதிய உத்தரவுகளைப் பெற்று, பிரசங்கம் செய்வதற்கும் அறுவடையை அறுவடை செய்வதற்கும் மறுபடியும் அறுவடை வயலுக்குள்ளாக புறப்பட்டுப்போக வேண்டுமென்றும் நாங்கள்-நாங்கள் ஜெபிக்கிறோம்... கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஆவியானவர் பேசும்படியாக அருளும், நாங்கள் இதை உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நான்...(ஒரு சகோதரி தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் - ஆசிரியர்) உமக்கு நன்றி, கர்த்தாவே. 17. ஒரு தலைப்புக்காக, பரிசுத்த மத்தேயு 22-ம் அதிகாரம், 14-வது வசனத்தை உபயோகிக்க விரும்புகிறேன். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக் கொள்ளப் பட்டவர்களோ சிலர் என்றார். 18. ஒரு தலைப்புக்காக, 'தேவனால் அருளப்பட்ட பாதை' என்பதை உபயோகிக்க விரும்புகிறேன். 19. இப்பொழுது, கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்து இன்றைக்கு நாம் மிக அதிகமாகக் கேள்விப்படுகிறோம். உண்மையில், அதற்காகத் தான் நாமெல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறோம், கர்த்தருடைய வருகைக்காக. இப்பொழுது, அந்த மகத்தான நிகழ்வுக்கு அருகாமையில் நாம் இருக்கிறோம் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். எப்பொழுதும் சம்பவித்ததிலேயே, அல்லது எப்பொழுதாவது சம்பவிக்கக் கூடியதிலேயே மிகவும் மகத்தான சம்பவமானது சரியாக அருகாமையில் இருக்கிறது, அது இப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது: அதுதான் அவருடைய வருகையாகும். 20. இந்த நேரத்திற்காக சபையானது இரண்டாயிரம் வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. வேதவாக்கியங்கள் படிப்படியாக திறந்து காட்டப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இயேசு கல்வாரியின் வெளிச்சத்திலே, தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு வெறுமனே ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தாம் சிலுவையில் அறையப்படுவதைக் குறித்து அவர் பேசினதைக் காட்டிலும் தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தே அதிகம் பேசினார். எனவே அது அப்படியே முன்பாக இருக்கிற ஒரு மகத்தான காரியமாகவே இருந்தாக வேண்டும். 21. "இப்போது இங்கே ஊழியர்கள், கிறிஸ்தவ வியாபாரிகள், விசுவாசிகள், துண்டுப் பிரசுரம் விநியோகிப்பவர்கள் மற்றும் பல்வேறு வகையான ஊழியங்களைச் செய்பவர்கள் என நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். இன்று மதியம் நாம் இந்தச் சிலுவையின் நிழலில் தங்கியிருக்கும்போது, நம்முடைய உள்ளான நிலையைச் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் இங்கிருந்து செல்லும்போது தேவன் நம் இருதயங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்." 22. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் பின்லாந்தில் இருந்தேன். அப்போது நான் ஒரு-ஒரு சிறிய மோட்டார் வாகனத்தில் சாலையில் கீழே வந்து கொண்டிருந்தேன். பின்லாந்தில் ஜனங்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். வாலிப பெண்கள் கோதுமையை அறுத்து, கொஞ்சம் கதிர்கட்டுகளோடு கூட அதைக் கட்டி வைக்க பழமை நாகரீகமான கோதுமையைக் அறுவடை செய்ய கைக்கருவியை கொண்டவர்களாய் வயல்வெளியில் இருக்கிறார்கள். அவர்களில் அநேகர் தங்களுடைய மதிய உணவைக் கொண்டிருக்க (புசிக்க) ஒரு மகத்தான பெரிய மரத்தின் கீழே ஒன்றாக கூடியிருந்தார்கள். பேசுவதற்கு அது ஒரு நல்ல நேரம் என்று நினைத்தேன், ஏனென்றால் என்னோடு கூட ஒரு மொழிபெயர்ப்பாளரையும் நான் உடையவனா யிருந்தேன். நாங்கள் வெறுமனே ஒரு சில நிமிடங்களுக்கு வாகனத்தை நிறுத்தினோம், அங்கு அறுவடை நடந்து கொண்டிருந்த வயலுக்கு வெளியில் ஒரு பெரிய மரத்தின் கீழே அந்த நிழலில் இருபது சொச்சம் ஜனங்கள் ஒன்று கூடியிருந்தார்கள். 23. நான் கர்த்தருடைய அன்பைக் குறித்து அவர்களிடம் பேசி, யுத்தத்திற்குப் பிறகு அவர்கள் எப்படியாக வயலில் மண்கட்டிகளை உடைத்து, பரப்பாக்குவதற்கான வேளாண் பொறிகளை அவர்கள் ஓட வைக்க வேண்டியதாயிருந்தது என்பதைக் குறித்து நான் கேள்விப்பட்டதை அவர்களிடம் கூறினேன். வயல்களில் ஏர் உழுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாதிருந்தது, ஏனென்றால் குளிர்காலம் ஏற்கனவே துவங்கி விட்டிருந்தது. அவர்கள் நிலத்திலே விதை விதைக்கும்படியாக நிலத்தின் மேற்பரப்பை கிண்டிக் கிளறும்படி தங்களுக்குப் பின்னால் மண்கட்டிகளை உடைத்து பரப்பாக்கு வதற்கான வேளாண் கருவிகளை அப்படியே இழுக்க வேண்டியிருந்தது. அவர்கள் நிலத்திலே விதை விதைக்காமல் இருந்தால், அடுத்த வருடத்தில் அறுவடை எதுவும் இல்லாமல், எல்லாரும் மரித்துப் போய் விடுவார்கள். மேலும் இரவு நேரத்தில், ஸ்திரீகளும் மனிதர்களும் அதைச் செய்கிறார்கள், அதை இழுக்க எந்தக் குதிரைகளோ, மிருகங்களோ கிடையாது, உழுத நிலத்தில் மண் கட்டிகளை உடைத்து சமன் செய்யும் கருவியை ஜனங்களே இழுக்க வேண்டியிருந்தது. 24. அந்த முகாமில் வேலை செய்யாமல் சோம்பேறியாக யாருமே இல்லை. அவர்கள்... வேண்டியதாயிருந்தது. இரவு நேரத்தில் வெளிச்சம் காட்ட அந்தச் சிறு பிள்ளைகள் ஒரு கண்ணாடிக்கூட்டு விளக்கை வைத்துக் கொண்டு அவர்களுக்கு முன்பாக போனார்கள், அப்பொழுது தான் அவர்களால் விதையை நிலத்தில் ஊன்ற முடிந்தது, சிறிய சகோதரன் அடுத்த மாற்றுக்காக ஓய்வு எடுக்கையில், அந்தச் சிறு பிள்ளைகள் அம்மாவுக்கு முன்பாக ஓடுவார்கள், அவர்கள் ஏதோவொரு விதத்தில் நிலத்தைக் கீறிக் கிளற வேண்டியிருந்தது; அது அந்தப் பருவகாலத்திலே மிகவும் தாமதமாகி விட்டிருந்தபடியினால், உழுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாதிருந்தது, அவர்கள் துரிதமாக நிலத்தில் விதைக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யாவிட்டால், அறுவடை இருக்காது. 25. நாம் ஒன்றாகக் கூடி வந்திருக்கையில், இவ்வாறு எண்ணுகிறேன், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படியும் நிலத்தை கிளறுங்கள். நிறைய காரியங்களைக் கற்றுக்கொள்ள, வேதாகம கல்லூரிகளுக்கு நமக்கு நேரமில்லை. ஆனால்-ஆனால் நாம் வார்த்தையை உலகத்திற்குக் கொண்டு சென்றாக வேண்டும். ஏதோவொரு விதத்தில் மேற்பரப்பை கிளறுங்கள், அங்கே நிலத்தில் விதை இல்லாவிட்டால், கர்த்தருடைய வருகைக்காக எந்த அறுவடையும் இருக்க முடியாது. 26. நான் அந்த ஒரு சிறு கூட்ட பின்லாந்து மக்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், சற்று நேரத்திற்குப் பிறகு, பதினேழு பேர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். 27. எனக்கோ நேரம் முடிந்து விட்டது; நாங்கள் நிச்சயமாக விரைந்து சென்றாக வேண்டும். எனவே நாம் இதைச் சிந்தித்துப் பார்த்து, நாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கிற இந்த மகத்தான காரியத்தை சந்திக்க வேண்டும். கல்வி தோல்வியடைந்து விட்டது, மனிதனால் உண்டாக்கப்பட்ட மற்ற காரியங்கள் எல்லாமே தோல்வியடைந்து விட்டன. அது அவ்வாறு தான் இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். நம்முடைய ஸ்தாபன தடை வேலிகள், ஜனங்கள் தங்களுடைய ஸ்தாபனங்களைக் குறித்து தர்க்கம் செய்யவும் அவ்விதமாகத் தொடர்ந்து செய்யவும் அவர்களை ஆக்குவதற்காக, ஜனங்களுக்கிடையே தடைகளைக் கொண்டு வந்து விட்டன. ஆனால் ஜனங்களுக்குக் கொடுக்கும்படியாக, சபையிடம் கொடுக்கும்படியாக, இயேசு நம்மிடம் கொடுத்த காரியத்தை நாம் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டோம் என்று நான் நம்புகிறேன். 28. உங்களுக்குத் தெரியும், இந்தப் பிற்பகலில் நாம் இங்கிருந்து போவதற்கு முன்பாக, நம்முடைய ஆண்டவர் இந்த உவமையை எழுதின போது, இன்னும் சரியாகச் சொன்னால் இதைக் கூறினபோது. அவர் எதைக் குறித்து கூறிக் கொண்டிருந்தார் என்பதைக் காண வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பாருங்கள், அங்கே... வந்து கொண்டிருக்கிற இந்த மகத்தான நிகழ்வுக்கு ஆயத்தப்படும்படியாக, ஜனங்களிடம் எவ்வாறு சொல்லுவது என்பதை நாம் அறிய வேண்டும். கர்த்தருடைய வருகையானது மிக மகத்தானதாக இருக்குமானால், நம்மால் செய்யக்கூடிய மிகவும் அத்தியாவசியமான காரியம் எதுவென்றால், ஜனங்களை அதற்காக ஆயத்தப்படுத்துவது தான். ஏனென்றால் அவர் வரும்போது, நாம் ஆயத்தமாக இல்லை என்றால், நாம் கைவிடப்படுவோம். ஆனால் அவரிடமிருந்து வரும் நம்முடைய செய்தியைக் கொண்டு, இதைக் கொண்டு, நாம் நிச்சயமாக கர்த்தருடைய வழியை ஆயத்தப் படுத்தியாக வேண்டும், ஏனென்றால் "மனுஷனுக்கு செம்மையாகத் தோன்றுகிற ஒரு வழி உண்டு. செம்மையாகத் தோன்றுகிற ஒரு வழி உண்டு, ஆனால் அதன் முடிவோ மரண வழிகள்' என்று வேதவாக்கியம் கூறுகிறது. 29. எனவே ஜனங்கள் தவறான வழியில் ஆயத்தமாகி இருந்தால், என்னவாகும்? இராணுவ வீரர்கள் யுத்தத்திற்கு பயிற்சி பெறாமல், ஆனால் அங்கே வெளியே நடனம் பண்ண பயிற்சி பெற்று யுத்த களத்திற்கு போவார்களானால் என்னவாகும்? அவர்கள் - அவர்கள் எப்பொழுதும் மிக நல்ல நடனக்காரர்களாக இருந்த போதிலும், அவர்கள் சண்டையிட பயிற்சி பெற்றாக வேண்டும். அவர்கள் வேறு ஏதோவொரு விதமான அலுவலைக் கொண்டிருப்பதற்காக அங்கே வெளியே போய், தங்களுடைய துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருக்குமானால், என்னவாகும்? அப்படியானால் அவர்கள் சிறிது நன்மையான காரியத்தை செய்திருப்பார்கள். ஆகவே அறுவடையின் வேலைக்காரர்கள் கர்த்தருடைய வருகைக்காக ஜனங்களை எவ்வாறு பயிற்றுவிப்பது என்பதை அறிந்துகொள்ளும்படியாக ஆயத்தமாக வேண்டும், ஏனென்றால் அதைச் சந்திக்க விரும்பாதவர்கள் நம்மில் யாரும் கிடையாது. 30. வருகைக்கு மிகச் சமீபமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறோம், தோன்றுகிறதாக நாம் காண்கிற இந்த மகத்தான அற்புதமான காரியங்கள், சீக்கிரமாக இருக்கப் போகிற அவருடைய வருகைக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. 31. இப்பொழுது, இயேசு இந்த உவமையைப் போதித்தார்... இந்த உவமைகளை நீங்கள் எப்பொழுதாவது புரிந்துகொள்ள இயலுவதற்கு முன்பாக, நீங்கள் ஏறக்குறைய வேதவாக்கியங்களைக் குறித்த கிழக்கத்திய பார்வையை உடையவர்களாக இருந்தாக வேண்டியிருக்கும், ஏனென்றால் வேதாகமமானது ஒரு கிழக்கத்திய புஸ்தகமாகும். அது ஒரு கிழக்கத்திய எழுதப்பட்ட வார்த்தையாக இருந்து, அது 2000 வருடங்களுக்கு முன்பாகவே எழுதப்பட்டிருக்கும் போது, நாம் மேற்கத்திய ஜனங்களாக இருந்து, ஒரு கிழக்கத்திய - ஒரு மேற்கத்திய பார்வையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கே அர்த்தங்கள் மாறாதது தான். ஆனால் நீங்கள் எப்பொழுதாவது கிழக்கிற்கு போவீர்களானால், வேதாகமமானது உங்களுக்கு ஒரு புதிய புஸ்தகமாக இருக்கும். அதனுடைய அர்த்தம், அதனுடைய வியாக்கியானம் மிக அதிகப் பிரகாசமாகத் தோன்றும். 32. வேதவாக்கியங்களின் ஒழுங்கில் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது நமக்குத் தெரியாது என்று கூறும்படியாக நான் அர்த்தம் கொள்ளவில்லை, ஆனால் நான் இதைக் கூறும்படிக்குத் தான் அர்த்தம் கொள்கிறேன்: கிழக்கத்திய வழக்கங்களில், அந்நாளில் இயேசு போதித்த விதத்தை நீங்கள் காணும் போது, அது அப்படியே அதை உங்களுக்கு பிரகாசமாக்கும். மேலும் அவர்கள் சிறிதளவும் மாறவில்லை. அவர்கள் அப்போது இருந்தது போலவே சரியாக இன்றும் அப்படியே இருக்கிறார்கள். 33. ஆகையால் மனிதன் குழப்பமடையாமல் இருக்கவும், நாம் இப்பொழுது மிகவும் கலந்து இருக்கிற இக்காரியங்கள் நடக்காமல் இருக்கவும், இயேசு உவமைகளில் ஜனங்களுக்குப் போதித்தார். 34. இப்பொழுது, இந்தக் கலியாண விருந்து... கலியாண விருந்து வருங்காலத்தில் இருக்கிறது என்பதை நாமெல்லாரும் நிச்சயமாகவே அறிவோம், எல்லா காலங்களிலும் மீட்கப்பட்ட யாவரும் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக மேலே வரும்போது, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டு, அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டவர்களாயும், அவருடைய நீதியின் வஸ்திரத்தினால் போர்த்தப்பட்டவர்களாகவும் அங்கே நிற்பார்கள், அப்போது நாம் ஆகாயம் முழுவதும் பரவியிருக்கும், அந்த மகத்தாக கலியாண விருந்தை கொண்டிருப்போம். 35. அந்த நாளைக் குறித்து நான் சிந்தித்துப் பார்க்கிறேன், இங்கேயிருக்கும் நம்மில் அநேகர் தலை நரைத்தவர்களாயும் நீண்டு மெலிந்தவர்களாய், வளைந்த தோள்களை உடையவர்களாயும் வழி நெடுகிலும் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறவர்களாயும் இருக்கிறோம். ஏன், இந்தப் பிற்பகல் வேளையில், நம்முடைய சபையாரில் ஏறக்குறைய 90 சதவீதம் பேர், நாம் அழைக்கிறபடி, பிரயாணத்தின் பாதி தூரத்தை முடித்தவர்களாய் இருக்கிறார்கள். உங்களில் அநேகர் சுவிசேஷ செய்தியைக் கொண்டுசேர்க்க உழைத்தும், போராடியும், எதுவுமில்லாமல் தியாகத்தோடு செய்திருக்கிறீர்கள். 36. இவை எல்லாம் முடிந்து, கலியாண விருந்து ஆயத்தப்படுத்தப்பட்டு, நாம் ஒருவர் ஒருவராக பந்தியில் எதிரெதிராக அமரும் அந்த நாளைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். நான் அங்கு போய்ச் சேரும்படியாக கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன் என்றால், நான் உற்றுப் பார்த்து, "நான் பிஸ்காவில் உங்களைச் சந்தித்தேன், இல்லையா?' என்று கூறுவேன் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நாம் மறு கரையில் ஒருவரையொருவர் சந்தித்து, வெளியே போய் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வது எப்படி என்பதன் பேரில் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நாம் இவ்விதம் ஒன்றாகக் கூடி வரும் நேரங்களைக் குறித்துப் பேசிக்கொள்ளும் போது, அந்த நீண்ட வரிசையினூடாக கீழாக நோக்கிப் பார்த்து, அப்பாவும் அம்மாவும் மற்றும் அவர்கள் யாவரும் அங்கே இருப்பதைப் பார்க்கும் போது, அந்தக் கலியாண விருந்து ஒரு அற்புதமான நேரமாக இருக்காதா. 37. நாம் பந்தியின் குறுக்காக கரத்தை நீட்டி மற்ற ஒவ்வொருவரின் கரத்தையும் பற்றிக் கொண்டு, மற்ற ஒவ்வொருவருடைய கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வோம். நம்மை அங்கே கொண்டு சென்ற தேவனுடைய கிருபையை பாராட்டி சிறிது கண்ணீர் நம்முடைய கன்னங்களில் வழிந்தோடும் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அப்பொழுது இராஜா வெளியே வந்து, நான் அநேக தடவைகள் கூறியபடி, நம்முடைய கண்களிலிருந்து எல்லா கண்ணீர்களையும் துடைத்து. "இனி அழ வேண்டாம். இப்பொழுது அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன. உலகத் தோற்றம் முதற்கொண்டு உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ஆண்டவருடைய சந்தோஷங்களுக்குள் பிரவேசியுங்கள்' என்று கூறுவார். அங்கே இருக்க வேண்டுமென்று நாமெல்லாருமே விரும்புகிறோம். நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய எல்லாருமே அங்கே இருக்க வேண்டுமென்றே நாம் விரும்புகிறோம், ஏனென்றால் இது மிக அவசரமானதாக (உடனடியாகச் செய்ய வேண்டியதாக) உள்ளது. காலம் கடந்து விட்டது, நாம் அவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். 38. அவர் முதலாவதை வெளியே அனுப்பின போது, அவர் கூறியதைக் நீங்கள் கவனித்தீர்களா. அந்த முதலாவது குழு, அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் சாக்குப்போக்குகளைச் சொல்லியிருந்தார்கள். ஓ, செய்யும்படியாக அவர்களுக்கு இது அல்லது அது இருந்தது. விருந்து, அந்த இராஜா நிச்சயமாக தேவனாகும். குமாரன் கிறிஸ்துவாக இருக்கிறது, அவர் தேவனுடைய குமாரனாயிருக்கிறார். மேலும் நாம், மணவாட்டி அழைக்கப்பட்ட ஒருவளாக இருக்கிறாள். மணவாட்டி... முழு உலகத்தாரும் அழைக்கப்பட்டிக்கிறார்கள், எல்லாரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாம் எப்பொழுதாவது அந்த கலியாண விருந்தில் கலந்து கொள்ளக் கூடும் முன்பாக நாம் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கிறது. 39. இப்பொழுது, கிழக்கத்திய தேசங்களில், அங்கே ஒரு கலியாணம் நடைபெற வேண்டி இருந்தபோது, இராஜா தன்னுடைய மகனின் கலியாணத்திற்கான நேரத்தைக் குறிப்பார். அதன்பிறகு அழைப்பிதழ்களைக் கொடுப்பது மகனின் கடமையாக இருந்தது. ஒரு அழைப்பிதழ் இல்லாமல் எவரும் அந்த விருந்துக்கு வர முடியாது. 40. இந்த விருந்திற்கான ஒரு அழைப்பு கொடுக்கப்படாமல் ஒரு மனிதனோ, அல்லது ஒரு பெண்ணோ ஒரு சபைக்குள்ளோ, அல்லது தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளோ எப்பொழுதாவது நடந்து வருகிறார்கள் என்பதை நான் நம்ப மாட்டேன். இப்பொழுது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதை மறுத்துவிடவோ செய்யலாம். அது உங்களைப் பொறுத்தது. சில ஜனங்கள் அநேக வருடங்களாக நாள்தோறும், எழுப்புதலுக்குப் பின் எழுப்புதலாக சபைக்குச் சென்றாலும், இன்னுமாக அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை புறக்கணிக்க வேண்டுமென்று கருதுவதில்லை, ஆனால் அவர்கள் அப்படியே அதைச் செய்வதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். 41. நீங்கள் அதைக் கவனித்தீர்களா, ஒருவருக்குச் செய்யும்படியாக ஏதோவொன்று இருந்தது. அவர் ஒரு துண்டு நிலத்தை வாங்கியிருந்தார். வேறொருவர் ஏதோவொரு மாட்டை வாங்கியிருந்து, அவர் கட்டாயமாக போய் அவைகளை பரிசோதித்துப் பார்த்தாக வேண்டுமாம். அவன் அவைகளை வாங்கும் முன்பாகவே அந்த மாட்டை பரிசோதித்துப் பார்க்காமல் இருந்ததைப் போன்று இல்லை. நீங்கள் பாருங்கள், அது வெறுமனே, அது வெறுமனே ஒரு சாக்குப்போக்கு தான். 42. ஊழியக்காரர்களாகிய நீங்கள் எல்லாரும், மற்றவர்களும், வர்த்தகர்களும் கைப்பிரதிகளைக் கொடுத்தலும், அதைப் போன்றவைகளும், நீங்கள் எல்லாருமே அந்தக் காரியங்களைக் காண்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஜனங்கள் சாக்குப்போக்குகளை வைத்திருக்கிறார்கள். "நான்-நான் இன்றிரவு வீட்டில் தங்கியாக வேண்டும். என்னால் இந்த எழுப்புதலில் கலந்துகொள்ள முடியாது.' அவர்கள் அதைச் சொல்லுவார்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுடைய அழைப்பைப் புறக்கணித்து விடுகிறார்கள். 43. இப்பொழுது, நாம் இதை மறுபடியுமாக பார்ப்போம். மேலும் ஒருவன், அவன் இதைச் செய்திருந்தான், அவனுடைய மனைவி அவனை வரவிடவில்லை. அது வேறொரு சாக்குப்போக்கு. நமக்கும் அந்த அழைப்புக்கும் இடையில் எதுவுமே நிற்கக் கூடாது. அது மாட்டின் நுகத்தடியாகவோ, அல்லது உன்னுடைய அலுவலோ, அல்லது உன்னுடைய - உன்னுடைய மனைவியோ, அல்லது உன்னுடைய பிள்ளைகளோ, அல்லது எதுவுமோ, அந்த அழைப்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்கக் கூடாது. தேவன் தம்முடைய அறுவடையின் வயலுக்கோ, அல்லது அவருக்காக ஏதோவொன்றைச் செய்யும்படிக்கோ உங்களை அழைத்திருக்கிறார், உங்களுக்கும் தேவனுக்கும் இடையே எதுவுமே நிற்கக் கூடாது. நிச்சயமாக அதுதான் முதலாவது வர வேண்டும். அந்த அழைப்பு கொடுக்கப்பட்டு... 44. இப்பொழுது, அழைப்புகள் கொடுக்கப்பட்ட போது, சாக்குப்போக்குகள் சொல்லப்பட்டது. அப்போது அவர்கள் திரும்பி வந்து, 'அவர்கள் வர மாட்டார்களாம்' என்று கூறினார்கள். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் அவர்களை கடைசி முறையாக அனுப்பிய போது, வேலிகளருகிலும், பெருவழிகளிலும், ஒதுக்குத் தெருக்களுக்குள்ளும் போய், முடவர்களையும், சப்பாணி களையும், குருடர்களையும், உள்ளே வரும்படி வருந்தி கூட்டிக் கொண்டு வர வேண்டியிருந்தது. தேவன் தம்முடைய பந்தியை ஆயத்தப்படுத்தாமலும், அங்கே யாருமே இல்லாமலும் போக தீர்மானித்தாரா. தேவன் தம்முடைய பந்திகள் நிரம்பியிருப்பதையே விரும்புகிறார். கொழுத்த ஜெந்துக்கள் அடிக்கப்பட்டது. எல்லாமே தயார் செய்யப்பட்டு, யாவும் ஆயத்தம் செய்யப்பட்டாயிற்று; நீங்கள் கவனிப்பீர்களானால், போக வேண்டியிருந்த மகத்தான கடைசி செய்தியானது, பெருவழிகளுக்குள்ளும், ஒதுக்குத்தெருக்களுக்குள்ளும் போக வேண்டியதாயிருந்தது. 45. இப்பொழுது, இந்தச் சிறிய சபையானது, ஏழைகளைப் போஷிப்பதையும், முடவர்களையும், சப்பாணிகளையும் சூம்பின உறுப்புடையவர்களையும் உள்ளே கொண்டு வந்து, வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதையும்... குறித்து, நான் அதை விரும்புகிறேன். இங்கேயிருக்கும் இந்தச் சிறு அடையாளத்தை வாசிக்கும்போது, அதுதான் எனக்கு இந்த எண்ணத்தைக் கொடுக்கிறது. 'முடவர்கள் நடப்பார்கள்' என்று அது கூறுகிறது. நிச்சயமாக. 46. கடைசி அழைப்பும் கடைசியாக அழைப்பு கொடுக்கப்படுதலும் என்னவென்றால், தெய்வீக சுகமளித்தலானது தேசத்தினூடாக விரைவாகப் பரவிச்செல்லும்படியான ஒரு மகத்தான நேரமாயிருந்ததாகும். அதுதான் கடைசி அழைப்பு. அதனுடைய முடிவுக்கு நாம் வந்து, சரியாக இப்பொழுது இன்னும் முடிவடையாத காரியங்களை அப்படியே இழுத்துக் கொண்டிருக்கிறோம். எனவே கர்த்தருடைய வருகையானது எவ்வளவு சமீபமாயிற்று? 47. வேலிகளுக்குள்ளும் ஒதுக்குத்தெருக்களுக்குள்ளும் போய், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், வரும்படியாக அவர்களை வருந்தி கூட்டிக் கொண்டு வாருங்கள். முடவர்களையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு வாருங்கள். சுகமளிக்கும் ஆராதனை அவர்களுக்கு உண்டாயிருந்தது. 48. தெய்வீக சுகமளித்தலுக்கான சுகமளிக்கிற ஆராதனையானது ஒருபோதும் எந்த கூட்டத்திற்கான நியமமும் அல்ல. அது அவ்வாறு இருக்கக் கூடாது. நாம் வெறுமனே சுகமளித்தலுக்காக மாத்திரம் ஆராதனையை எடுத்துக்கொள்வதில்லை. சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் வழக்கமாக, 'தெய்வீக சுகமளித்தலானது தூண்டில் முள்ளிலுள்ள இரையைப் போன்றதாகும். நீங்கள் மீனுக்கு தூண்டில் முள்ளைக் காட்டுவதில்லை; நீங்கள் தூண்டில் இரையைத் தான் அவனுக்குக் காட்டுகிறீர்கள். அவன் தூண்டில் இரையைப் பற்றிக்கொள்ளும்போது, தூண்டில் முள்ளையும் பிடித்துக்கொள்கிறான் என்று கூறுவது போன்று. எனவே தெய்வீக சுகமளித்தலைக் குறித்துள்ள அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது; அது ஜனங்களை ஒன்றாகக் கொண்டு வருகிறது, அப்போது தேவனுடைய இராஜ்யத்திற்காக மீன்களைப் பிடிக்கும் சுவிசேஷமாக அந்த தூண்டில் முள்ளானது இருக்கிறது. 49. இப்பொழுது, யாராவது ஒருவர் கலந்துகொள்ளக் கூடும் முன்பு... ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி, தம்முடைய மகனின் விருந்தில் கலந்துகொள்ளப் போகும்படியான ஒரு அழைப்பிதழை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்றால் என்னவாகும், நீங்கள் சொல்லியிருப்பீர்கள். ஜனாதிபதியின் மகன் ஒரு விருந்தைக் கொண்டிருக்கப் போவதாக இருந்து, நீங்களோ நாம் எல்லாரும் செய்வதைப் போன்று, இங்கே வெளியே ஜீவனத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கும் வெறும் ஒரு ஏழை மனிதனாக இருப்பீர்களானால்... யாரோ ஒருவர் வந்து, நம்முடைய அன்பிற்குரிய ஜனாதிபதியாகிய டுவைட் ஐசன்ஹோவர் அவர்களிடமிருந்து, அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு மகத்தான பெருவிருந்தில் கலந்து கொள்ளும்படியாக ஒரு அழைப்பிதழை உங்களுக்குக் கொடுப்பாரென்றால், அது என்னவொரு ஆசீர்வாதமான காரியமாக இருக்கும். 50. இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து தற்பெருமையாக பேசிக்கொள்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஏன், லாஸ் ஏஞ்சல்ஸ்சிலுள்ள எல்லா இடங்களிலும் நீங்கள் சென்று, 'நான் என்னவொரு முக்கியமான நபர் என்று பாருங்கள்' என்று ஐனங்களிடம் சொல்லிக்கொள்ளுவீர்கள். நிச்சயமாக. 'ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி கலியாண விருந்திற்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.' ஏன், அந்த கலியாண விருந்தில் கலந்துகொள்வது என்பது, உங்களுக்கு ஒரு கௌரவமாக இருந்திருக்கும். அது ஒரு கனமாக இருந்திருக்கும். அந்தக் கலியாண விருந்தில் கலந்து கொள்ளும்படியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபராக இருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று தாம் நினைத்தாலொழிய ஜனாதிபதி அப்படிப்பட்ட ஒரு அழைப்பிதழை உங்களுக்கு அனுப்பியிருக்கவே மாட்டார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஆனால் நீங்களோ 'நான் வர விரும்பவில்லை' எனற தகவலை திருப்பி அனுப்புவீர்களானால், என்ன சம்பவிக்கும் என்று நினைக்கிறீர்கள், அது எப்படியாக அவருடைய உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கும். நல்லது அப்படியானால், அந்த கலியாண விருந்தில் கலந்துகொள்ளும்படியாக தேவன் உங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதின் நிமித்தமாக, அது எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள். 51. 'பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற ஜனங்கள் அதைக் குறித்து மிக அதிகமாக தற்பெருமை பேசிக் கொள்கிறார்கள்' என்று ஜனங்கள் கூறுகிறார்கள். 52. நம்மால் போதுமான அளவு அதைக் குறித்து தற்பெருமை பேசிக்கொள்ள முடியாது. அது அதைக் குறித்து தற்பெருமையாக பேசிக்கொள்ளும் ஏதோவொன்றாக உள்ளது. தேவனுடைய குமாரனின் கலியாண விருந்திற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் கலியாண விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பது என்னவொரு நல்ல காரியமாக இருக்கிறது என்று நாம் தெருவில் நடந்து சென்று, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சிருஷ்டியிடமும் சாட்சிகூறி, சொல்லுவதற்கு அது தகுதியுள்ளதாக இருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய அன்பிற்குரிய குமாரனின் கலியாண விருந்தில் கலந்துகொள்ள பூமியின் குடிசைகளிலிருந்து உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறாரே. ஓ, அது என்னவொரு அழைப்பாக உள்ளது. அந்த விருந்தில் கலந்து கொள்வது என்பது 100 பில்லியன் ஜனாதிபதி விருந்துகளுக்கு பெறுமானமுள்ளதாக பெருமதிப்புடையதாக இருக்கிறதே. 53. இப்பொழுது, அணிவதற்கு பொருத்தமான ஆடைகள் உங்களுக்கு இல்லை என்று திரு. ஐசன்ஹோவர் அறிந்திருப்பாரென்றால், அப்போது அவர் நிச்சயமாக அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருப்பார். தேவனும் சரியாக அதைத் தான் செய்தார். நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உடை உடுத்தும்படியான முன்னேற்பாடுகளை அவர் செய்தார், ஏனென்றால் 'நல்லவர்களையும் தீயவர்களையும் அழையுங்கள். அவர்கள் எல்லாரையும் ஒன்றாக அழையுங்கள்' என்று அவர் சொன்னதை நினைவுகூருங்கள். உங்கள் கடந்த கால வாழ்க்கை என்னவாக இருந்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. வரும்படியாக உங்களுக்கு ஒரு அழைப்பு கிடைக்கும் போது, வர ஆயத்தமாகி விடுங்கள். நீங்கள் கெட்டவர்களாகவோ, தெருக்களில் அணுகிக்கேட்கும் ஒரு விபச்சாரியாகவோ இருந்து வந்தாலும், ஒரு சூதாட்டக்காரனாக இருந்தாலும், குடிகாரராக இருந்தாலும், ஒரு கொலைகாரனாக இருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, தேவன் உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பாரானால், உங்களுடைய இருதயத்தைத் தட்டிக்கொண்டிருப்பாரானால், மீதியை அவர் பார்த்துக்கொள்வார். 54. நீங்கள் சோர்வுற்றவர்களாக, 'நல்லது, நான் வெறுமனே வெதுவெதுப்பான ஒரு சபை அங்கத்தினன்' என்று கூற வேண்டாம், நீங்கள் அப்படியே அந்த அழைப்புக்கு கவனம் செலுத்துவீர்களானால், அவர் இன்னுமாக அதைப் பார்த்துக்கொள்வார். மேலும் நீங்கள், 'அழைப்பு யாருக்கு?' என்று கேட்கலாம். 'விருப்பமுள்ளவன், வந்து ஜீவத்தண்ணீர்களை இலவசமாய் பானம்பண்ணக்கடவன்.' விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அழைப்பு உள்ளது. 55. மேலும் இப்பொழுது, கிழக்கத்திய நாடுகளில் - கொடுத்த குமாரன், யாருக்கு விவாகமோ அந்த மகன் தான் அலங்கார உடுப்புகளையும் கொடுக்க வேண்டியிருந்தது. முதலில் ஒரு அலங்கார உடுப்பை அணியாமல் எந்த மனிதனும் வர முடியாதிருந்தது. ஏனென்றால் ஒரு பணக்கார பெண்மணியான ஒருவள் வருவாளானால், அவள் மலர்களால் ஒப்பனை செய்யப்பட்ட தொப்பிகளோடும், செல்வந்தனான ஒரு மனிதன் பின்தொங்கலற்ற நீண்ட மேலங்கியை அணிந்து கொண்டும், அடுத்த மனிதனோ அந்தச் சிறிய... ஒன்றை அணிந்து கொண்டும் வந்தால். அதைக் குறித்து என்னால் நினைத்துப் பார்க்க முடியும் என்று எண்ணினேன், வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி துணியை அது எப்பொழுதாவது என்னவாக இருப்பினும் - அந்த வகையான பாவாடைகளில் ஒன்றை அணிந்துகொண்டு வர, அடுத்த பெண்மணியோ பட்டுப் பாவாடையை அணிந்து வருவாளானால்... 56. இந்தப் பழங்கால மார்க்கமானது உங்களுக்காக என்ன செய்யும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி துணியினால் ஆகிய பாவாடையை அணிந்துள்ளவளையும், பட்டுப்பாவாடை அணிந்துள்ளவளையும் அவர்கள் ஒருவர் மற்றவரைச் சுற்றிலும் தங்கள் கரங்களைப் போட்டு 'சகோதரியே' என்று அவர்களை அழைக்கும்படி செய்யும். அது அதைச் செய்யும். அது பின்தொங்கலற்ற நீண்ட மேலங்கியை அணிந்துள்ளவர் ஒரு ஜோடி தளர்த்தியான மேலாடைகளை அணிந்துள்ளவரை அன்போடு அணைத்து, சகோதரனே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உரக்க சத்தமிடும்படி செய்யும். அதைத் தான் அது செய்யும். அது கர்வத்தை நடையை உங்களை விட்டு அகற்றிப்போட்டு விடும். ஆமாம். 57. ஆனால் இந்தக் கிழக்கத்திய விதத்தில் அதைச் செய்வது என்பது, அங்கே தளர்த்தியான மேலங்கிகள் இருந்தன, அதனால் அவர்கள் எல்லாருமே ஒரே மாதிரியாக காணப்படுகிறார்கள். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்தக் கல்வியும் இல்லாத என்னுடைய பழைய கென்டக்கி க்ஷழ்ர்ந்ங் ன்ல் விதத்தில் கூட, இன்னுமாக என்னால் அந்த அலங்கார உடுப்பை அணிய முடியும், ஏனென்றால் அவர் அதை எனக்குத் தருகிறார். அவர் எனக்கு அழைப்பு விடுத்தார், நான் அதை ஏற்றுக்கொண்டேன். நீங்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, அந்த அலங்கார உடுப்பானது மூடிக்கொள்கிறது... அதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது புரிகிறதா?, அந்த அலங்கார உடுப்பு. இப்பொழுது, மூடும்படியாக ஒரு உடுப்பையும் (தர்க்ஷங்) கூட தேவன் உண்டாக்கியிருக்கிறார்; அது பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இரத்தமாக உள்ளது, அதுதான் உடுப்பாக இருக்கிறது. 58. இப்பொழுது, ஜனங்கள் வரும்போது, அவர்கள் தங்களுடைய அழைப்பிதழை கொண்டு வருவார்கள்;. இப்பொழுது நம்முடைய முரட்டுத்தனமான தவறு இங்கே தான் இருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், நாமல்ல, ஆனால்... நான் முழு சுவிசேஷ ஜனங்களிடம் கூறுவதாக கருதவில்லை, நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான்... போன்று கருதுகிறேன். அத்தகைய மகத்தான மனிதர்களாகிய ஊழியக்காரர்களையோ, நான் கனப்படுத்துகிற மனிதர்களையோ, என்னுடைய முழு இருதயத்தோடும் மரியாதை செலுத்துகிற மனிதர்களையும் அவமதிப்பு செய்யவில்லை... 59. பில்லி கிரஹாம் அவர்கள் தாம் செய்து கொண்டிருக்கிற மகத்தான வேலையின் நிமித்தமாக ஊழியக் களத்திலே நான் அவரைக் காட்டிலும் கனப்படுத்தவும் மரியாதை செலுத்தவும் கூடிய ஒரு நபரையும் எனக்குத் தெரியாது. இப்பொழுது நான் அவரைப் பின்தொடர்ந்து வரும்படியாக சரியாக நான் இருக்கிற இடத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருப்பதை நான் அன்றொரு இரவில் கண்டேன், அந்த இரத்த உறைதலினால் அவருடைய கண்களானது இங்கே கறுத்துப்போய் இருந்தது, மேலும் - மேலும் அவர்கள் தெருக்களிலே அடையாளங்களை வைத்திருந்தார்கள், எனவே செய்திகள், 'திரும்பிப்போய்விடும்' என்று அவரிடம் கூறி, ஓரல் ராபர்ட்ஸ்-ம் கூட திரும்பிப் போய் விட்டார். பில்லி கிரஹாமோ அதனூடாக பிரயாசத்தோடு அதைச் செய்து முடிக்கும் வரையில், அதனோடு தரித்திருந்தார். நான் பில்லி கிரஹாமின் மேல் மரியாதை வைத்திருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அது முற்றிலும் சரியே. ஜாக் ஷலர்... 60. அதன்பிறகு திரு. கிரஹாம் அவர்கள் ஒருமுறை இவ்வாறு சொன்னார், அவர் லூயிவில்லில் இருந்தபோது, ஏனென்று அவர்-அவர் வியந்தார், பவுல் புறப்பட்டுச் சென்ற போது... வேதாகமத்தை எடுத்து அதை இவ்விதமாக உயர்த்திப் பிடித்தவாறு, அவர்... என்று கூறினார். அந்தக் காலையில், கிறிஸ்தவ காலை உணவில், இன்னும் சரியாகச் சொன்னால், ஊழியக்காரர்களுக்கான காலை உணவில், அவர், 'உங்களுக்குத் தெரியும், பவுல் புறப்பட்டுச் சென்று ஒருவன் மனமாற்றம் அடைந்தபோது, அடுத்த வருடத்தில் அவன் திரும்பி வந்தபோது, அந்த ஒருவனிலிருந்து முப்பது பேர் மனமாற்றம் அடைந்திருந்தார்கள். ஆனால், நான் ஒரு பட்டணத்திற்குள் சென்று, அநேக வாரங்கள் கூட்டங்கள் நடத்தி, ஒருக்கால் கர்த்தருக்காக நான் 20,000 மனமாற்றம் அடைந்தவர்களைக் கொண்டிருந்து, ஒரு வருடத்தில் திரும்பி வந்தபோது, அவர்களில் 20 பேரையும் என்னால் கண்டுபிடிக்க முடியாதிருக்கிறது' என்று சொன்னார். ஓ, இது அற்புதமானது என்று எண்ணினேன். 61. மேலும் அவர், 'என்ன காரியம் என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒருகூட்ட சோம்பேறி பிரசங்கிமார்கள் தான், நாம் அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்த பிறகு, அவர்களிடம் போய் அவர்களுடைய கரங்களைக் குலுக்கி, அவர்களை உள்ளே கொண்டு வருவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் கால்களை மேசையின் மேல் வைத்துக்கொண்டு ஒரு அழைப்பை அவர்களுக்கு எழுதுகிறீர்கள்' என்று கூறினார். 62. அது நன்றாகவே இருந்தது. அது மிகவும் நன்றாக இருந்தது, அது மிக நல்ல கூற்று தான். ஆனால் உங்களுக்குத் தெரியும், நான்-நான் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று விரும்பவில்லை, ஆனால் நான், 'வெளியில் சென்று... பெற்றுக்கொண்ட சகோதரன் பில்லி அவர்களே, எந்தப் பிரசங்கியார் சென்று, பவுலினால் மனமாற்றம் அடைந்த ஒருவனைப் பெற்றுக்கொண்டார்? மேசையின் மேல் தன்னுடைய கால்களை வைத்திருந்து மிகச் சோம்பேறியாக அங்கே இருந்த அந்த மேய்ப்பர் யார்?' என்று நினைத்தேன். 63. இல்லை. அது இதோ இருக்கிறது. இந்த நாளின் நிமித்தமாகவே, அவர்கள் வெளியே அனுப்பப்படுகையில், அவர்களுக்கு அழைப்பை கொடுக்க இருக்கும் நவீன வழியின் நிமித்தமாகவே தான். ஆனால் சகோதரனே, அது அதைக் கூறுவதில்லை. நீங்கள் அவர்களைப் போதுமான அளவு ஆழமாகக் கொண்டு செல்வதில்லை. உண்மையாகவே மறுபடியும் பிறந்த அந்த அனுபவத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு நிலைக்கு நீங்கள் அவர்களைத் திரும்பக் கொண்டு வருவதில்லை. பவுல் தன்னால் மனமாற்றம் அடைந்தவர்களை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு அதனூடாக கொண்டு சென்றான், தேவனுடைய அக்கினியானது அவனுடைய இருதயத்திலே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவனுக்கு எதுவும் அவசியம் இல்லாதிருந்தது. பிரசங்கியார் சோம்பேறியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், தேவன் என்ன ... அதை செய்யும் படியாக, அவன் அலுவலில் இருந்தான். அப்படியே அவனுடைய இருதயமானது பரிசுத்த ஆவியாலும் அக்கினியாலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவன் அலுவலைச் செய்யும்படியாக வெளியே இருந்தான். அது சரியே. அதைக் குறித்த காரியம் என்னவென்றால், இன்று நம்முடைய நவீன வேதசாஸ்திரங்களும், வேதசாஸ்திரிகளும், நவீன சபைபோதகங்களும், அதைப் போன்ற மற்றவைகளும் தான், நாம் அப்படியே அழைப்புகளை விநியோகிக்கிறோம். 64. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், கிழக்கத்திய வழக்கத்தில், அவர்கள் அழைப்பைப் பெற்ற பிறகு, உள்ளே வருவதற்கான அந்த இடத்துக்கு அவர்கள் வரும்போது, மோசமானவர்களும், ஏழைகளும், அலட்சியத்தனம் காட்டுகிறவர்களும், எல்லாருமே தங்கள் கையில் அவர்களுடைய அழைப்பிதழை வைத்திருப்பார்கள், குமாரன் வாசலில் அவர்களைச் சந்திப்பான். அவன் அழைப்பிதழை எடுத்து, அவன் அதை கூர்ந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, அவன், '... உங்களைக் குறித்து இது அருமையாக உள்ளது' என்று இந்தவிதமாக கூறுவதற்கு மிக அதிகமாக, 'என்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுவது என்பது உங்களுக்கு அருமையாக இருந்தது. இப்பொழுது, நீங்கள் என்ன அளவாக இருக்கிறீர்கள் என்பதை நான் பார்ப்பேன்' என்று கூறுகிறான். ஒரு தளர்த்தியான மேலங்கியை அவனுக்குப் பொருத்தமாக உடுத்தி, அதன்பிறகு அவனை விருந்து நடக்கும் நீண்ட பொது அறைக்கு வரும் வாசலுக்கு அனுப்புகிறான். அங்கே தான் வித்தியாசம் இருக்கிறது. 65. பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு, 'நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ளவர்களுக்கும் உண்டாயிருக்கிறது' என்று சொன்னான். 66. அப்போஸ்தலர் 19-ல், பவுல் சில பாப்டிஸ்டுகளைச் சந்திக்கிறான். அவன், 'நீங்கள் விசுவாசித்தது முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா?' அந்த அழைப்பு அவர்களிடம் இருந்தது, 'ஆனால் நீங்கள் இன்னுமாக அங்கியை அணிந்திருக்கிறீர்களா?' என்று கேட்டான். 67. நீங்கள் கலியாண விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? 'ஆமாம்.' அப்படியானால் நீங்கள் நிச்சயமாக வஸ்திரம் தரித்தாக வேண்டும். 68. ஜனாதிபதி உங்களிடம் கேட்டிருப்பாரென்றால், நீங்கள் உங்கள் கையெல்லாம் கறுப்பாகவும் எண்ணெய் பசையோடும், ஸ்திரீகளாகிய நீங்கள் உங்கள் தலைமயிர் கீழே தொங்கிக்கொண்டு, உங்கள் முகம் கழுவாமலும், உங்களுடைய பழைய அழுக்கான மேலாடையையும் அணிந்துகொண்டு நீங்கள் அங்கு மேலே ஜனாதிபதியின் விருந்திற்குப் போவீர்களா? இல்லை, ஐயா. அப்படியானால் நீங்கள் அந்த சூழலுக்கு மிகவும் பொருந்தாதவர்களாக இருப்பீர்கள். 69. அவ்வண்ணமே இந்த ஒரு கூட்டம் வெதுவெதுப்பாகவும், பெயரளவிலாகவும் இருக்கும் கிறிஸ்தவமானது, சத்தமிட்டுக் கொண்டும், துதித்துக் கொண்டும், களிகூர்ந்து கொண்டும், ஆவியில் பாடிக்கொண்டும் இருக்கும் உன்னதத்தை இவர்கள் அடையும்போது, சூழலுக்குப் பொருந்தாததாக இருக்கிறது. அது சூழலுக்கு மிகவும் பொருந்தாததாக இருக்கிறது. 70. நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்த போது, ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, அவர், 'பில்லி, நான் உம்முடைய செய்தியைக் கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் அங்கே பின்னால் இருந்த அந்த பெண் ஆமென் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்து, அழுது கொண்டிருந்தாள், அவள் அப்படியே என்னை மரணத்திற்கேதுவாய் உறைய வைத்தது போன்று இருந்தாள். நடுக்கமானது என்னுடைய முதுகிலே ஓடிக்கொண்டு நின்றது என்று உமக்குச் சொல்லுகிறேன்' என்றார். 71. அதற்கு நான், 'அவள் அவ்வாறு நடந்து கொண்டிராவிட்டால், நடுக்கமானது என்னுடைய முதுகிலே ஓடிக்கொண்டு நிற்குமே' என்றேன். நான் எங்கே இருந்தேன் என்றே எனக்குத் தெரியாதிருக்கும். ஓ, தேவனுடைய ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் அசைவாடி, பரிசுத்த ஆவியால் அவர்களை முழுவதுமாக நிரப்புவதை உணருவது எனக்குப் பிடிக்கும். அவர், 'ஓ, அது என்னை ஏறக்குறைய உறைய வைத்துவிடுகிறது' என்றார். நான், 'சகோதரனே, நீர் எப்பொழுதாவது பரலோகத்திற்குப் போவீரானால், நீர் உண்மையாகவே மரணத்திற்கேதுவாக உறைந்து போய்விடுவீர். ஏனென்றால் அவர்கள் அந்த பிரசன்னத்திற்குள் வரும்போது, அங்கே சத்தங்களும், தேவனைத் துதித்துக் கொண்டிருந்தலும், களிகூருதலும், ஆயிரமாயிரம் மடங்கு களிகூருதலும், பாடுதலும், தேவனைத் துதித்துக் கொண்டிருத்தலும் இருக்கப் போகிறது. நீர் அந்தவிதமாக துவங்குவதற்கு முன்பாகவே நீரும் கூட இங்கே மாறிவிடும்' என்றேன். 72. இப்பொழுது, கிழக்கத்திய மாதிரியானது குமாரன் அழைப்பிதழை பெற்றுக்கொள்ளும்படியாக அங்கே நிற்பதற்கானதாக உள்ளது. இப்பொழுது, பவுலுடைய கூட்டமானது... அழைப்பிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த யோவானுடைய கூட்டத்தை நான் அர்த்தப்படுத்துகிறேன், ஆனால் பவுல், 'நீங்கள் உங்களுடைய அழைப்பிதழைப் பெற்ற முதற்கொண்டு, அங்கியைத் தரித்துக்கொண்டு விட்டீர்களா. நீங்கள் விசுவாசித்தது முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டீர்களா?' என்று கேட்டான். அதற்கு அவர்கள், 'பரிசுத்த ஆவி உண்டு என்பது எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்கள். அவன், 'அப்படியானால், நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?' என்று கேட்டான். அவர்கள், 'யோவான் கொடுத்தது' என்றார்கள். அதற்கு அவன், 'அப்படியானால், யோவான் வருகிறவராகிய, அதாவது இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுத்தானே' என்றான். அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். பிறகு பவுல் அவர்கள் மேல் தன்னுடைய கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தது. வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அழைப்பிதழானது அப்படியே வருகிறது, நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 73. ஆனால் குமாரன் வாசலில் அழைப்பிதழோடு கூட அவர்களைச் சந்தித்த போது, அவன் அவர்களை தளர்த்தியான மேலங்கியில் பொருத்தினான் (ஆமென். இப்பொழுது நான் பக்திபரவசப்படுகிறேன்), அவர்களை ஒரு தளர்த்தியான மேலங்கியில் பொருத்தினான். அவர்களுடைய அளவுக்கான ஒன்றை அங்கே கொண்டிருந்து, அவன் அந்த தளர்த்தியான மேலங்கியை அவர்களுக்கு உடுத்துவித்தான், அப்பொழுது எல்லாரும் ஒரேவிதமாக தோற்றமளிப்பார்கள். 74. நீங்கள் பாருங்கள், அங்கே எந்த 'பெரிய ஆளும்' கிடையாது. ஓ, ஜனங்கள், 'ஓ, வியாதியஸ்தருக்காக ஜெபிக்க சகோ. பிரன்ஹாம் வருவாரானால்...' என்று, இதைக் கூறத் தொடங்கும் போது. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னால் ஒருவரையும் சுகப்படுத்த முடியாது. அங்கே தேவனோடு எந்த 'பெரும்புள்ளியும்' கிடையாது. நாமெல்லாரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம், நாம் ஒவ்வொருவருமே அப்படித்தான் இருக்கிறோம். அங்கே நம்மிடத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது. நாம் மிகப்பெரிய கூட்டத்தைக் கொண்டிருப்பதோ, அல்லது - அல்லது மிகப்பெரிய இதையோ, அல்லது மிகப்பெரிய அதையோ கொண்டிருக்க வேண்டியது கிடையாது. அது மாம்சத்துக்கு ஏற்றவைகளாக இருக்கிறது. தேவன் ஒருபோதும் அதை ஆசீர்வதிப்பது கிடையாது. சிலசமயங்களில் ஒரு நபரின் மேல் அந்த அங்கி இருந்து அவன் அதைப்போன்று நடந்துகொள்கிறானோ என்று நான் சந்தேகிக்கிறேன். சகோதரனே, தேவன் நம்மெல்லாரையும் ... இருந்து ஒரே விதமாகவே உண்டாக்குகிறார் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாம் அங்கியைத் தரித்துக்கொண்ட போது, நாமெல்லாருமே ஒருவருடையவர்களாகவே இருக்கிறோம். அவர்களால் பேச முடியாதிருந்தாலோ, அவர்கள் தங்களுடைய ஏபிசி-களையும் கூட அறியாமல் இருந்தாலும், அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே விதமாக இருக்கிறோம். ஆகையால் தான் நான் சற்று முன்பு அந்த கருத்தைக் கூறினேன். நாமெல்லாரும் ஒரேவிதமாகவே இருக்க விரும்புகிறோம். 75. அதன்பிறகு அவர்கள் இந்த அங்கியை அணிந்தார்கள். பிறகு அவர்கள் உள்ளே வந்து அந்த இடத்தில் வரவேற்கப்பட்டார்கள். அவர்களால் உள்ளே வந்து கலியாண விருந்தை பெற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு இந்த இடத்திலே இயேசு சொன்னது என்னவென்றால், அங்கியை அணிந்திராமல் இருந்த ஒரு மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை அவர் கண்டார். அவன் எப்படி உள்ளே வந்தான்? அதுதான் கேள்வி. அங்கியை தரித்திராத ஒருவன் அங்கே இருந்தான். இது சம்பவித்த அநேக இடங்களை அவர் சொல்லியிருக்கிறார் என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது அவர்கள் உள்ளே வருகிறார்கள்... ஒருசமயம் அவர் மழையானது நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிவதாக பேசினார். ஒருசமயம், நிலத்திலுள்ள கோதுமையைக் குறித்தும் களைகளைக் குறித்தும் அவர் பேசினார்; அவைகள் இரண்டும் ஒன்றாக வளர்ந்தன. 'அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து பிள்ளைகளோடு கூட இராஜ்யத்தில் உட்காருவார்கள். இராஜ்யத்தின் புத்திரரோ தள்ளப்படுவார்கள் (பாருங்கள்?), காரணம் என்னவென்றால் அவர்கள்-அவர்கள் 'ஆண்டவரே, நாங்கள் உம்முடைய நாமத்திலே இதைச் செய்தோம், உம்முடைய நாமத்தில் அதைச் செய்தோம்' என்று கூறினார்கள்.' 76. அதற்கு அவர், 'நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்' என்று சொன்னார். அங்கி தரிக்காதவனாய் அவர் அங்கே கண்ட அதே நபர் இவன் தான். 77. இப்பொழுது, சிலசமயங்களில் என்னைப்போன்று புறப்பட்டுப் போய் வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து, ஒரு வெற்றியைக் கொண்டிருக்கிற ஜனங்களைப் பார்த்து நாம் குறிப்பிடுகிறோம். அதனால் நான் பரலோகத்துக்குப் போவேன் என்று அர்த்தமல்ல. பாருங்கள்? அங்கே உண்மையாகவே போய்ச் சேருகிற நபர் அவன் அங்கே போய்ச் சேரும்போது சற்றே திகைப்படைவான் (ஆச்சரியம் அடைவான்). 78. அநேகர் அந்நாளில், அவர்கள், 'ஆண்டவரே, நீர் எப்பொழுது வஸ்திரமில்லாதவராயிருந்து, உமக்கு வஸ்திரம் தரிப்பித்தோம்? எப்பொழுது நீர் பசியுள்ளவராயிருந்து நாங்கள் உம்மைப் போஷித்தோம்? எப்பொழுது நீர் காவலிலிருக்க, நாங்கள் உம்மை வந்து கண்டோம்?' என்று கேட்பார்கள். 79. அதற்கு அவர், 'என் சகோதரரான இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்றார். அவர்கள் அங்கே போய்ச் சேருவதற்கு தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள் என்று அவர்கள்-அவர்கள் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. 80. நாம் ஏதோவொருவிதமான ஒரு பெரும்புள்ளியாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் போது, அங்கே போய்ச் சேருவதற்கான ஒரு ஆவியை நாம் எப்பொழுதாவது எப்படி கொண்டிருக்கப் போகிறோம்? அந்த ஜனங்கள் ...?... உள்ளேயிருக்கும் அந்த அங்கியைக் குறித்து சிலசமயங்களில் நான் வியப்படைகிறேன். நாம் வேறு யாரோ ஒருவரைக் காட்டிலும் பெரியவர்கள் என்றோ, வேறு யாரோ ஒருவரைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்றோ, 'நாங்கள் பெரிய எண்ணிக்கை உடையவர்கள்; எங்கள் ஸ்தாபனம் பெரியது' என்றோ, அல்லது ஏதோவொன்றோ உள்ள அந்த மனப்பான்மையை நாம் எடுத்துக்கொள்ளும் போது, அந்த அங்கியானது அவர்கள் எல்லாரையும் ஒரே போன்று தோற்றமளிக்கும்படி செய்ய இருந்தபோது, நாம் எப்படி எப்பொழுதாவது அவ்விதமாக அதைச் செய்யப் போகிறோம்? தேவனுடைய பார்வையில், நாமெல்லாரும் ஒரே விதமாகவே தோற்றமளிக்கிறோம். நிச்சயமாக. நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவிகளாயிருக்கிறோம். மிக பணக்காரர் முதல் மிக ஏழைகள் வரையில், மிகச்சிறப்பாக உடையுடுத்தினவர்கள் முதல் மிக மோசமாக உடையுடுத்தினவர்கள் வரையில், நாம் நிச்சயமாக அதை அடையாளம் கண்டுகொண்டாக வேண்டும். வெளிப்புற உடையுடுத்துதலோடு இதற்கு சம்பந்தமே இல்லை, அது அழிந்து போய்விடும். ஆனால் உள்ளேயுள்ளது தான் நீடித்திருக்கும். முழு உலகத்திலும் வாங்கக்கூடிய மிகச்சிறந்த சூட்டுகளைக் காட்டிலும் அவருடைய பரிசுத்தத்தின் அங்கியால் என்னுடைய ஆவி மூடப்படுவதையே நான் அதிகம் விரும்புவேன். நிச்சயமாக. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வமுடையவனாயிருப்பது. 81. அவ்வண்ணமாக இந்த ஒரு மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்து, தன்னுடைய இடத்தைப் பெற்றிருந்து, மேஜையில் உட்கார்ந்துகொண்டு, அங்கே அமர்ந்து கொண்டிருந்தான். இராஜா உள்ளே வந்து அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டுகொண்டார். அவர் ஒருபோதும் அப்படியே, 'இப்பொழுது, நீ வந்திருந்தாய் என்பதை நான் ஒருபோதும் அறியாதிருந்தேன்,' என்றோ அல்லது ஏதோவொன்றை சொல்லவில்லை என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அல்லது, அவன், 'சிநேகிதனே...' என்று சொன்னான். அவன் வந்த காரணத்தினால் அவர் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. அவர், 'இப்பொழுது, நீ ஒருபோதும் வந்திருக்கக் கூடாது' என்று சொல்லவில்லை. இல்லை, அது அதுவல்ல. அவர் என்ன நடந்திருக்க வேண்டும் என்று சொன்னார், 'அங்கியை அணிந்து கொள்ளாமல் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' அங்கே தான் அடுத்த காரியம் இருக்கிறது. 82. இப்பொழுது, மனிதர்களே, உங்களுடைய கைப்பிரதிகளை கொடுப்பது சரிதான். தேவனைக் குறித்து ஒரு மனிதனிடம் பேசுவது சரிதான், ஆனால் அங்கேயே அவனை விட்டு விடாதீர்கள்; அவன் ஆவியினால் நிறையப்படுவது மட்டுமாக, தேவனுடைய நீதியில், பரிசுத்த ஆவியின் நீதியில் அவன் பீடத்தில் அங்கியை அணிந்து கொள்வது மட்டுமாக, அப்படியே தொடர்ந்து சரியாக அவனுக்குப் பின்னால் இருங்கள். யாராவது ஒருவர் இங்கே உங்கள் சபைக்குள் வரும்போது, சுவிசேஷகர் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிப்பாரானால், ஒருக்கால் அவர் அழைப்பிதழ்களை விநியோகித்து, கிறிஸ்துவின் நண்பர்களுக்கு அழைப்பிதழ்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், அந்த சுவிசேஷகர் அழைப்பிதழ்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒருவர் வரும்போது, அவர் அங்கே நின்றுவிட அனுமதிக்காதீர்கள், தேவன் அவருக்கு அங்கி தரிப்பது வரையில் நீங்கள் மிகவும் சரியாக அவரை தேவனுடைய பிரசன்னத்தில் கொண்டு செல்லுங்கள். (ஒலிநாடாவில் காலியிடம்) ஒரு கலியாண விருந்து சீக்கிரமாக நடக்கப் போகிறது. 83. என்ன சம்பவித்தது? அவன் என்ன சொல்லியிருக்க முடியும்? அவன்... அவன் பேசாமலிருந்தான் என்று வேதாகமம் கூறியுள்ளது. அவனால் எதையும் கூற முடியாதிருந்தது. ஏன், ஏனென்றால் அவன் வாசல் அல்லாமல் வேறு ஏதோவொரு வழியில் வந்திருந்தான். அவன் வாசல் வழியாக வந்திருந்தால், குமாரன் ஒரு அங்கியை அவனுக்குக் கொடுத்திருப்பான். 'வேறு எந்த வழியாக ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்' என்று இயேசு சொன்னார். இப்பொழுது, உங்களால் அங்கு போய்சேர முடியும்; நீங்கள் பரலோகத்தில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் மீண்டுமாக உதைத்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்படுவீர்கள். எனவே என்ன நன்மை... அவர்கள் எப்பொழுதைக் காட்டிலும் அதிக அதிகமாக நரகத்தைப் பெற்றுக்கொள்வார்களானால், (அது சரியே.), அந்த அழகானவைகளைக் காணும்படியாக நீங்கள் அங்கே இருந்து அதன்பிறகு புறக்கணிக்கப்பட்டீர்கள் என்பதை அறிந்துகொள்வது என்பது. நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறதா? 84. இந்த அங்கி என்னவாக இருக்கிறது? நீங்கள் கிறிஸ்துவின் அங்கியை அணிந்துகொள்ளும் போது, நீங்கள் உங்களுக்குள்ளே கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்துவின் ஆவி கிறிஸ்துவைப் போன்றே நடந்துகொள்ளும். அது கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்யும். அது கனிவாகவும், நீடிய பொறுமையாகவும், நற்குணத்துடனும், தயவாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் இருக்கும், இவை பரிசுத்த ஆவியானவரோடுள்ளதாகும். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, நீங்கள் அவருடைய நீதியால் அங்கியை தரித்துக்கொள்ளும் போது வருகிற தேவனுடைய ஆவியாக அது இருக்கிறது. அவருடைய ஆவி உங்களுக்குள்ளே ஜீவிக்கிறது. 85. இந்த மனிதன் பேசாதிருந்தான். அவன்... மூலமாக வந்திருந்தான். அவன் ஒருக்கால், 'நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் ஒரு பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு. அல்லது நான் ஒரு பெந்தெகோஸ்தேயினன்' என்று கூறலாம். அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. புரிகிறதா? 86. அவன் வாசல் மூலமாக வந்திருக்கவில்லை, அவன் ஒரு அங்கியைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டான். இயேசு, 'நான் ஆட்டுத் தொழுவத்திற்கு வாசலாயிருக்கிறேன்' என்றார். நீங்கள் வரும்போது, நீங்கள் மெதோடிஸ்டு சபையின் மூலமாக வர முடியாது; அப்படியானால் நீங்கள் ஒரு கள்ளனும் ஒரு கொள்ளைக் காரனுமாயிருக்கிறீர்கள். நீங்கள் பாப்டிஸ்டு சபையின் மூலமாகவும் வர முடியாது; அப்படியானால் நீங்கள் ஒரு கள்ளனும் ஒரு கொள்ளைக்காரனுமாயிருக்கிறீர்கள். நீங்கள் பெந்தெகோஸ்தே சபையின் மூலமாகவும் வர முடியாது; அப்படியானால் நீங்கள் ஒரு கள்ளனும் ஒரு கொள்ளைக்காரனுமாயிருக்கிறீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வர வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் எப்பொழுதாவது அவரிடம் வரக்கூடிய ஒரே வழி என்னவென்றால் இயேசுவின் மூலமாக வருவதற்கு தான். நீங்கள் அவரினூடாக கடந்து செல்லும்போது, அவர் தம்முடைய அன்பை கொடுத்து, ஒரு அங்கியை உங்களைச் சுற்றிலும் போட்டு, உங்களை தொழுவத்திற்கு வழிநடத்தி, நாம் அல்லேலூயா பக்கத்தில் ஜீவித்து கொண்டிருக்கும் போது ...?... சொன்னார். வாசல் மூலமாக வருதல்... 87. அவன் மனிதனுடைய வழியில் மேலே வந்தான். அவன் ஏதோவொரு வழியில், சபையின் வழியில் மேலே வந்தான். அவன் வேறு ஏதோவொரு வழியில் வந்தான். பாருங்கள்? ஆனால் தேவன் அருளப்பட்ட ஒரு வழியை உடையவராயிருக்கிறார். அந்த வழி இயேசுவாக இருக்கிறது. நீங்கள் இயேசுவின் மூலமாக வரும்போது, நீங்கள் ஒரு ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் மரித்து புதுப்பிறப்பின் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்து அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டீர்கள். எப்படி உங்களுக்குத் தெரியும்? காரணம் என்னவென்றால் உங்களுடைய ஜீவியமானது வேதாகமத்திலுள்ள அவைகளோடும், அவருடைய நீதியில் அங்கி தரிப்பிக்கப்பட்டிருந்த அந்த அப்போஸ்தலர்களோடும் ஒத்துப்போகும். அப்படியானால் கிறிஸ்தவர்களாக இருப்பதாக உரிமைகோரும் ஜனங்களால் ஏன் அடையாளங்களிலும் அற்புதங்களிலும், தெய்வீக சுகுமளித்தலிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலும் விசுவாசம் கொள்ள முடியவில்லை? ஏன், அவர்கள் அதைச் செய்ய வேண்டும். அதைக் குறித்த காரியம் என்னவென்றால், அவர்கள் வாசலை அல்லாமல் வேறு ஏதோவொரு வழியில் வந்திருக்கிறார்கள். அவர்கள் வாசலில் வந்திருந்தால், அவர்கள் அதே விதமான ஒரு ஆவியால் அங்கி தரிப்பிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்கள் அதேவிதமான ஜீவனைக் கொண்டிருந்திருப்பார்கள்; அவர்கள் அதேவிதமான சாட்சியைக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் அதே ஜனங்களாய் இருந்திருப்பார்கள். 88. இப்பொழுது, நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், அநேக நேரங்களில், வேறு ஏதோவொரு வழியாக ஏறுகிறவர்கள் அந்த அவமானகரமான பெயரை உடையவர்களாயிருப்பார்கள். 'அது ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்' என்று கூறுவார்கள். அப்போஸ்தலர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? யோவான் ஸ்நானன் ஒரு காட்டு மனிதன் என்று வெளிப்படையாக கூறப்பட்டிருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து பயித்தியக்காரர் என்று சனகரீப் சங்கத்தினரால் வெளிப்படையாக கூறப்பட்டிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? 'இப்பொழுது நீ பயித்தியக்காரன் என்று எங்களுக்குத் தெரியும்.' 'பயித்தியக்காரன்' என்றால் 'பித்துபிடித்த நிலை' என்று அர்த்தமாகும். எல்லா அப்போஸ்தலர்களும் பயித்தியக்காரர்கள் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் பவுல் சொன்னதை நான் விரும்புகிறேன், 'மதபேதம் என்று அழைக்கப்பட்ட விதமாக, எங்கள் பிதாக்களின் தேவனுக்கு ஆராதனை செய்கிறேன்' என்று அவன் சொன்னான். ஓ, ஏனென்றால் அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அந்த அதே நீதியில் அங்கி தரித்தவனாயிருந்தான். 89. நண்பனே, அதுதான் இன்றைக்கும் இருக்கிறது. மிக அநேக ஜனங்கள் உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தேவனால் அருளப்பட்ட நுழைவாயிலை எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த வழியிலாவது போவீர்களானால்... அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் வந்தபோது, ஆரம்ப கால சபையானது இயேசு கிறிஸ்துவுக்குள் வந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களை ஒரு வித்தியாசமான ஜனமாக ஆக்கினது. அது அவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்ளவும், வித்தியாசமாக ஜீவிக்கவும் ஆக்கினது. அவர்களுடைய முழு - அவர்களுடைய முழு ஜீவியமும் வித்தியாசமாக ஊக்குவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வித்தியாசமான நோக்கங்கள் இருந்தன. அவர்களுக்கு வித்தியாசமான குறிக்கோள்கள் இருந்தன. அவர்கள் கிறிஸ்துவுக்குள் வந்தபோது எல்லாமே வித்தியாசமாக இருந்தது. 90. நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்போது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் உலகத்தை விட்டுவிடும்படி அது செய்கிறது. நீங்கள் உலகத்தின் காரியங்களை புறக்கணிக்கும்படி அது செய்கிறது. நீங்கள் எப்பொழுதாவது கிறிஸ்துவுக்குள் வந்திருந்தால், புதன்கிழமை இரவில் சபைக்குப் போகும்படியாக நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை எந்த நேரத்திலும் அணைத்து விடுவீர்கள். அங்கே ஒரு ஜெபக்கூட்டமானது இருக்கும்போது, ஏன், எதுவுமே உங்களை அந்த ஜெபக்கூட்டத்திலிருந்து விலகியிருக்கும்படி செய்ய முடியாது. உங்கள் இருதயத்திலிருக்கும் தேவனுடைய அன்பானது உங்களை சபைக்கு இழுக்கும், நீங்கள் அங்கே போய்ச்சேர்ந்து அந்த நிரம்பி வழியும் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும் போது, அங்கே ஏதோவொன்று உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றைக் கொண்டும் உங்களை உரத்த சத்தமாய் தேவனுடைய துதிகளை பாடும்படி செய்யும். பாருங்கள், நாம் வாசலை அல்லாமல் வேறு ஏதோவொரு வழியாக வருகிறோம். 91. ஜனங்கள் உள்ளே வந்து, 'நல்லது, நான் ஒரு பாப்டிஸ்டாக உள்ளே வருகிறேன்' என்று கூறுகிறார்கள். நீங்கள் வாசல் மூலமாக வந்து அங்கியை உரிமைகோருவீர்களானால், பாப்டிஸ்டாக இருப்பது எல்லாம் சரிதான். 92. 'நல்லது, நான் கத்தோலிக்கன்' என்று சொல்லுகிறார்கள். நீங்கள் வாசல் மூலமாக வந்து அங்கியைப் பெற்றுக் கொள்வீர்களானால், இன்னும் அதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் வாசல் வழியாக வந்தாலொழிய, நீங்கள் புறக்கணிக்கப் படுவீர்கள், ஏனென்றால் அது அவ்வாறு இருக்கும் என்று அவர் சொன்னார். அங்கே அவர்களில் அநேகர் அங்கி அணியாதவர்களாக இருக்கப் போகிறார்கள். 93. எனவே இதை ஞாபகம் கொள்ளுங்கள், நண்பர்களே, தெருவிலுள்ள நம்முடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும்போதும், சபையிலுள்ள நம்முடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும் போதும், அது அங்கே எங்கே உள்ளவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் ஆவியினாலே பிறந்து, அவருடைய நீதியில் அங்கி தரித்து, அவருடைய நற்குணத்தால் நிரம்பியிருக்கும்படியாக இயேசு கிறிஸ்துவின் மூலமாக முதலில் வராமல் இருந்துவிட்டு அவர்கள் கவனிக்கப்படாமல் இருந்து விடாதிருக்கட்டும், அப்பொழுது தான் நீங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையான மனமாற்றத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. நாம் கிரியை செய்தாக வேண்டும். பட்ங் ற்ண்ம்ங் ண்ள் ஜ்ர்ழ்ந். செய்தியானது மிக அவசரமாக உள்ளது. 94. நீங்கள் அப்படியே ஜலப்பிரளய காலத்திற்கு முன்னாலுள்ள உலகத்தில் கவனித்தீர்களா, நோவா... முன்பாகவே. முதலாவது மழைத் துளி எப்பொழுதாவது விழுவதற்கு முன்பாகவே, நோவா பேழைக்குள் போய்விட்டான். சோதோமின் நாட்களில், வானங்களிலிருந்து ஒரு சிறு பாகம் நெருப்பானது எப்பொழுதாவது விழுவதற்கு முன்பாகவே தூதன் லோத்துவிடம், 'சீக்கிரமாக இவ்விடத்திற்கு வந்துவிடு. நீ அங்கிருந்து வெளியே வரும் மட்டுமாக என்னால் எதையும் செய்ய முடியாது' என்றான். மீட்கப்பட்ட கடைசி நபர் வெளியே வரும்போது, அக்கினி விழுகிறது. 95. இப்பொழுது, நாம் ஒரு காலப்பகுதியின் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்பதை அறிவோம். நாம் சரியாக ஒரு முழு உலகளாவிய அழிவின் நுழைவாயிலில் இருக்கிறோம். சரியாக இப்பொழுதே விமான நிலையங்களில் வெடிகுண்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். லைப் இதழை வாசித்தீர்களா, அதுதான் என்று நான் நம்புகிறேன், ஒரு சில நாட்களுக்கு முன்போ, அல்லது வாரங்களுக்கு முன்போ, அதில் அந்த படைத்தலைவர் சொன்னது என்னவென்றால் அவருக்கு மேலே வெடிக்கும்படியாக முதலாவது ஒன்றானது அது சொல்லப்பட்டதாகும், அந்த வெடிகுண்டுகளில் ஒன்றை வெடிக்கச்செய்யும் போது என்ன சம்பவிக்கப் போகிறது. அவைகள் ஏற்கனவே அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஆயத்தமாயிருக்கின்றன. அவர்கள் ரேடார் மூலமாகவும் நட்சத்திரங்கள் மூலமாகவும் அவைகளுக்கு நேரத்தை நியமிக்க முடியும். அவர்களால் ஒன்றை மாஸ்கோவிலிருந்து சரியாக அங்கேயுள்ள வைன் தெருவிற்கும், சன்செட் பூலவார்டு மற்றும் வைனிற்கும், சரியாக புள்ளியில், சரியாக இலக்கில் போட முடியும். அவர்கள் ஒன்றை எங்கே போட விரும்பினாலும், அவர்களால் அதைச் செய்ய முடியும். 96. சரியாக அங்கே வெளியே சமுத்திரத்திலுள்ள இந்தப் பெரிய கப்பல்களில் நாம் வைத்திருக்கிறோம். அன்றொரு நாளில் நாங்கள் அவைகளைக் காண முடிந்தது. அந்த நீர்மூழ்கிக்கப்பல் மேலே வந்தது, நாங்கள் அவைகளுக்கு அருகில் போகக்கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அந்த ரேடாரோடு, வெடிகுண்டுகள் அங்கே வைக்கப்பட்டு, அவர்களால் ஒன்றை சரியாக மாஸ்கோவிலோ, அல்லது அதை வைக்கும்படியாக அவர்கள் விரும்பும் எந்தவிடத்திலும் அவர்களால் வைக்க முடிந்தது. இப்பொழுது, என்ன... 97. இந்நாட்களில் ஒன்றில், யாரோ ஒருவர் தவறு செய்யப் (ம்ஹந்ங் ஹ ள்ப்ண்ல்) போகிறார்கள், அவர்கள் ஒன்றை இழுக்கப் போகிறார்கள். அவர்கள் இழுக்கும்போது, இந்தப் பக்கத்திலும் கூட இழுக்கப் போகிறார்கள். இந்த உலகம் என்ன செய்யப் போகிறது? அதனால் தாங்கி நிற்க முடியாது. அங்கே ஒரு வெடிப்பும் ஒரு அதிர்வும் இருக்கும், அப்போது அந்த உலகமானது தூள்தூளாகிவிடும். இன்றிரவு சூரியன் மறைவதற்கு முன்பாகவே அது சம்பவிக்க முடியும். 98. அன்றொரு நாள் ஒரு மகத்தான படைத்தலைவர் பேசிக் கொண்டிருந்தார், அவர், 'நடக்கும் அடுத்த யுத்தமானது மூன்று நிமிடங்கள் மாத்திரமே கால அளவு உடையதாக இருக்கும்' என்று சொன்னார். மூன்று நிமிடங்கள்! விஞ்ஞானமானது நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருக்கின்றன என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. உலகத்தை முழுமையாக மிக பலமாக குலுக்கி துண்டுகளாக ஆக்குவதற்கும் அதை வெடிக்கச் செய்து அழித்துப்போடுவதற்கும் எல்லாமே மூன்று நிமிடங்கள் தான் தேவைப்படும். நாம் மரணத்திற்கு நெருங்கி ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 99. இந்நாட்களில் ஒன்றில், யாரோ ஒரு வெறியன் அவைகளில் ஒன்றை வெடிக்கச் செய்யப் போகிறான். அவர்கள்... அங்கே வெளியே, எதிரியைக் குறித்த இரகசிய தகவல்களை பெறும்படியாக உள்ள அந்த இடங்கள் மற்றும் எல்லாமும், காதுகளில் கேட்கும் எச்சரிக்கை ஒலி, அந்த வெடிகுண்டு கடந்து செல்வதோடு அந்த முதலாவது விசில் சப்தத்தை அவர்கள் கேட்கும்போது, அவைகளையும் கூட அவர்கள் இழுக்கப் போகிறார்கள். அப்போது அது துவங்கும்போது, இரண்டு வழிகளிலுமே அது இழுக்கப்படப் போகிறது, இதோ அவைகள் வருகின்றன. அது தொடர்ந்து நிகழுகிற முழுமையான மிகப்பலமான அதிர்வாக இருந்து, இந்த உலகமானது எரிமலை சாம்பல்களுக்குள் போய்விடும். அது செய்யக்கூடியது அவ்வளவு தான். அதனால் ஒருபோதும் அதை தாங்கிக்கொள்ள முடியாது. 100. அந்த வெடிகுண்டுகளில் ஒன்று 175 அடிகள் ஆழமாகவும், 100 மைல்கள் சதுரமாகவும் உள்ள ஒரு துளையாக தரையில் வெடிக்கும். ஐக்கிய நாடுகளில் ஒரே நேரத்தில் அவைகளில் பத்தாயிரத்தை அனுப்புவார்களானால் அதைக்குறித்து எப்படியிருக்கும். உங்களுடைய ஜீவனம் எங்கேயிருக்கப் போகிறது? உலகத்தால் அந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாது. 101. பூமியானது மையத்தில் பிதுங்கிக்கொண்டிருப்பதாக ற்ண்ப்ப் விஞ்ஞானமானது சரியாக இப்பொழுதே உரிமைகோருகிறது. நீங்கள் அதை இங்கே அன்றொரு நாளில் கண்டு, அதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டீர்கள், அவர்களுடைய... வடக்கிலுள்ள தண்ணீர்களானது பூமியின் நடுப்பகுதியில் மிக அநேக அடிகள் கீழே இறங்கியிருக்கிறது, இன்னும் சரியாகச் சொன்னால் வடக்கிலும் தெற்கிலும் ஆழமாக ஆகிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் பூமியானது பிதுங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் வழக்கமாக செய்வதைப் போன்று அதனுடைய சுற்றுப்பாதையைச் சுற்றுவதில்லை. எல்லாமே கர்த்தருடைய வருகையை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. நாம் சரியாக வாசலில் இருக்கிறோம். 102. மேலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த வெடிகுண்டுகளில் ஒன்று விழக்கூடும் முன்பாகவே... இதை மறந்து விடாதீர்கள். 'நோவாவின் நாட்களிலும் லோத்தின் நாட்களிலும் இருந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் இருக்கும்' என்று இயேசு சொன்னார். நோவாவுக்கு முன்பாக, எந்த மழையாவது கீழே விழுவதற்கு முன்பாகவே, நோவா பாதுகாப்பாக பேழையில் இருந்தான். சோதோமில் எந்த அக்கினியும் விழுவதற்கு முன்பாகவே, லோத்து வெளியேயிருந்தான். ஒரு வெடிகுண்டாவது தாக்கக் கூடுவதற்கு முன்பாகவே - சபையானது மகிமையிலுள்ள வீட்டில் இருக்கும், உள்ளே பிரவேசித்திருக்கும். நிச்சயத்தோடு இருங்கள். அதன்பிறகு இந்த... அப்படியே சிந்தித்துப் பார்க்கும்படிக்கு, நண்பர்களே, அது அவ்வளவு அருகாமையில் இருக்குமானால், கர்த்தருடைய வருகை எவ்வளவு அருகாமையில் இருக்கிறது? ஏனென்றால் அது சம்பவிப்பதற்கு முன்பாகவே கர்த்தர் வருகிறார். 103. ஒரு சிறிய கதை என் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை நான்... நீங்கள் - நான் வழக்கமாக ஒரு சில கால்நடைகளை மேய்ப்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே. நான் ஒரு உண்மையான மாடு மேய்ப்பவன் என்று நினைத்திருந்தேன். அவ்வண்ணமாக, நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த கால்நடை வளர்ப்பு பண்ணை எனக்கு ஞாபகம் இருக்கிறது, அங்கே ஒரு... இருந்தது. ஆர்மர் நிறுவனம் அதை சொந்தமாக வைத்திருந்தது, உண்மையில், அங்கே வெளியில் இருந்த அந்தக் கால்நடைகள், அவைகள் சூடு முத்திரையிடப்பட்டிருந்தன, நாங்கள் அவைகளை மேயவிடுவோம். எனவே அவைகள்... அந்தக் கதை... என்று போகிறது. நான் அந்த இடத்தில் வருவதற்கு முன்பாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒரு கூட்டம் வாலிப பெண்களைக் கொண்டிருந்தார்கள், கால்நடைப் பண்ணையாளர் அவர்களைக் கொண்டிருந்தார். அந்நாட்களில் அவர்கள் எல்லாரும் தளர்வாகவும் கீழே விரிவாகவும் இருக்கும் பாவாடைகளை (அணிந்திருக்கும்) மாதிரியான இந்தச் சிறு பெண்களாக இருந்தார்கள். நாம் அவர்களை 'வழக்கமான நடத்தையை அவமதிக்கும் வாலிப பெண்கள்' என்று அழைத்தோம் என்று நினைக்கிறேன். இக்காலத்தில் அவர்கள் 'நாடக கொட்டகையில் பாடற்குழுவுடனே பங்குகொள்பவள் அல்லது நடனம் ஆடும் பெண்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் எப்படியாகிலும், அவர்கள் ஒரு... இருந்தார்கள். வழக்கமான நடத்தையை அவமதிக்கும் வாலிப பெண்களே நாடக கொட்டகையில் பாடற்குழுவுடனே பங்குகொள்பவள் அல்லது நடனம் ஆடும் பெண்களை பெற்றெடுத்தார்கள். இப்பொழுது, நாடக கொட்டகையில் பாடற்குழுவுடனே பங்குகொள்பவள் அல்லது நடனம் ஆடும் இந்தப் பெண்கள் என்ன பெற்றெடுக்கப் போகிறார்கள்? என்னவென்று நான் வியப்படைகிறேன். "ஒருநாள் இரவு, 'காற்றை விதைத்து, பெருங்காற்றை (சுழற்காற்றை) அறுவடை செய்தல்' (Sowing To The Wind And Reaping The Whirlwind) என்ற தலைப்பில் நான் பிரசங்கிப்பேன். நாம் அதையேதான் செய்திருக்கிறோம்." 104. இப்பொழுது, இதைக் கவனியுங்கள். அதன்பிறகு அதற்கு முன்பாக... அவர்கள்... அந்த கால்நடை வளர்ப்பு பண்ணையானது முழுவதும் அருமையாகவும் மற்றும் எல்லாமாகவும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது, ஏனென்றால் வெளியே மேற்கிலிருந்த அந்த கால்நடை வளர்ப்பு பண்ணையைப் பார்வையிடுவதற்கு ஆர்மரின் மகன் வந்திருந்தான். அவர்கள் ஒரு பெரிய நேரத்தைக் கொண்டிருக்கப் போவதாக இருந்தார்கள். 105. நிச்சயமாக, இந்தச் சிறு பெண்கள் எல்லாரும் அந்த முதலாளியின், தலைவராகிய முதலாளியின் மகனை கவர்ச்சி செய்து மயக்கப் போவதாக இருந்தார்கள். உங்களுக்குத் தெரியும், அவர்கள் அவனை விவாகம் செய்துகொள்ளலாம். நல்லது, அவன் ஒரு இனிய இருதயத்தைத் தேடிக்கொண்டிருந்தான் என்பதை அவர்கள் அப்பொழுது அறிந்திருந்தார்கள். எனவே அந்த இரவிலே அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, உண்மையிலேயே அவனுக்கு ஒரு பழமையான மேற்கத்திய வரவேற்பை அளிக்கப் போவதாக இருந்தார்கள். அவர்களுடைய துப்பாக்கிகளை சுட்டு ஒரு பெரிய நேரத்தைக் கொண்டிருந்தார்கள். 106. அங்கே அவர்கள் ஒரு சிறு பெண்ணைக் கொண்டிருக்க நேர்ந்தது, அது பெற்றோரின் உடன்பிறந்தவரின் ஒரு மகளாக இருந்தது. அவளுடைய தாய் மரித்துப்போயிருந்தாள், அவளுடைய தகப்பனாரும் மரித்துப்போயிருந்தார். அவளுக்குப் போக ஒரு இடமுமில்லாதிருந்தது, எனவே அவள் தன்னுடைய மாமாவோடு (ன்ய்ஸ்ரீப்ங்) வசிக்கும்படி வந்திருந்தாள். எல்லாருடைய வேலையையும் அவளே செய்ய வேண்டியிருந்தது. மற்ற சிறு பெண்கள் அப்படியே எல்லா நேரமும் தங்களை முழுவதும் அதிக கவர்ச்சியாக ஆக்குவதிலேயே தொடர்ந்து இருந்தார்கள், அவளே எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருந்தது. 107. நீங்கள், உங்களில் அநேகருக்கு ஒரு அநாதையாக இருப்பதைக் குறித்த அனுபவம் ஒருக்கால் உண்டாயிருந்திருக்கலாம். அது ஜீவனுள்ள தேவனுடைய சபையை எனக்கு நினைவூட்டுகிறது (அது சரியே.): அது எல்லா நேரமும் பரிகசிக்கப்பட்டும், ஏளனம் செய்யப்பட்டும் இருந்தது. 108. இந்நிலையில் கால்நடை வளர்ப்பு பண்ணையின் சொந்தக்காரரின் மகன் வந்தபோது, அந்த உரிமையாளரின் மகன் வந்தபோது, வெளித்தோற்றத்தில் அவளுக்கு சுத்தம் செய்வதற்கு ண்ய் எந்த ஆடைகளும் இல்லாதிருந்தது. அவ்வண்ணமாக அந்த இரவில், அவர்கள் ஒரு மகத்தான பெரிய விஸ்தாரமான (பார்ட்டியைக்) கொண்டாட்டத்தைக் கொண்டிருந்தார்கள். அவள் அந்த - அந்த கால்நடைப் பண்ணையில் தொழிலாளிகள் தூங்கி வசிப்பதற்காக உள்ள கட்டிடத்தின் மிகவும் பின்னால் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவ்வண்ணமாக, அவர்கள் எல்லாரும் சாப்பிட்டு உணவருந்தும் அறையை விட்டு வெளியில் வந்தபோது, ஏன், அவள் உள்ளே சென்று, தட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து அவைகளை கழுவினாள். 109. இந்நிலையில் உரிமையாளராகிய திரு. ஆர்மரின் மகன் பின்னால் வெளியே நடந்து வந்து பார்க்கும்படி நேர்ந்தது. மேலும் அது உண்மையாக இருந்தது, அவன் ஒரு இனிய இருதயத்தைத் தேடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறு பெண் அங்கே உள்ளே நின்று தட்டுகளைக் கழுவிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். அவனுக்கு உண்மையாகத் தோன்றுகிறதாய் அவளைக் குறித்து ஏதோவொன்று அங்கே இருந்தது. 110. ஒரு சில நாட்கள் பார்வையிட்ட பிறகு, ஒரு இரவில், அவள் ஒரு கடினமான நாளின் வேலைக்குப் பிறகு, தட்டுகளைக் கழுவின தண்ணீரை அந்த இடத்தின் பின்னால் வெளியே ஊற்றிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர், 'மாலை வணக்கம்' என்று கூறுவதைக் கேட்டாள். அவள் பார்த்தபோது, அது வாலிபனாகிய திரு. ஆர்மர் அப்படியே அங்கே நின்று கொண்டிருப்பதாக இருந்தது. அவள் வைக்கோலை தன்னுடைய கால்களுக்கு மேலாக இழுத்தாள்; அவள் காலணிகள் இல்லாமல் வெறுங்காலில் இருந்தாள். அவள் தன்னுடைய தலையைத் தாழ்த்தினாள்; அவள் வெட்கமுற்றாள். அவன், 'நான் உன்னைக் கவனித்து வருகிறேன். நான் நம்புகிறபடி, நீ ஒரு குணசாலியான வாலிப பெண் என்பதைக் கண்டுகொண்டுள்ளேன். நான் இங்கே வெளியில் இருக்கிறேன், சிகாகோவிலும் அதைப் போன்ற மற்ற இடங்களிலும் அந்தப் பட்டணத்தில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிற அந்த ஆடம்பரங்களைக் குறித்து நான் மிகவும் சலிப்படைந்தவனாகவும் சோர்ந்து போனவனாகவும் இருக்கிறேன். நான்-நான் எனக்கு ஒரு மனைவியை தேடித்தான் இங்கே வெளியே வந்திருக்கிறேன். நீ அப்படியே அந்த குறிப்பிட்ட குணாதிசயத்தின் நிலையை பூர்த்தி செய்கிறாய்' என்றான். 111. ஓ, அவளுடைய இருதயமானது... போனதைக் குறித்து ஏறக்குறைய. அவ்வளவு மேன்மையான அந்தஸ்துடைய ஒரு மனிதனையா? அவனை விவாகம் செய்து கொள்ளும்படியாக ஒரு சிறு ஏழையான அனாதையாகிய அவளிடம் கேட்பதா? கலியாண விருந்திற்கு வரும்படியாக நான் ஒரு அழைப்பை பெற்ற போது, நான் ஒரு இரவிலே ஏறக்குறைய அந்தவிதமாகத்தான் உணர்ந்தேன். 'என்னை விரும்புகிறாரா? என்னைப் போன்ற ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசுவிடம் வரும்படியான ஒரு அழைப்பை உடையவனா யிருப்பானா?' ஆனால் அவர் என்னிடம் கேட்டார். நான்-நான்... இருந்தேன். ஏறக்குறைய அவள் உணர்ந்தது போலவே நான் அப்படியே ஏறக்குறைய கற்பனை செய்து பார்க்கிறேன். 'நான் யாராக இருக்கிறேன்?' ஆனால் நான் வரும்படியாக அவர் என்னிடம் கூறினார், நான் வந்தேன். அதன்பிறகு அவன் அவளிடம் சொன்னான்; அவன், 'இப்பொழுது, உன்னை நீ ஆயத்தம் செய்துகொள். இந்த இரவிலிருந்து ஒரு வருடத்தில், உன்னைப் பெற்றுக்கொள்ள நான் திரும்பி வருவேன். நீ என்னை விவாகம் செய்துகொள்வாயா?' என்றான். அவளோ, 'நல்லது, அது... நிச்சயமாக நான் விவாகம் செய்து கொள்வேன் (ஐ ஜ்ர்ன்ப்க்). ஆனால் நான் தகுதியுள்ளவள் அல்ல' என்றாள். நீங்களும் ஏறக்குறைய அந்தவிதமாக உணரவில்லையா? 'நான் தகுதியற்றவன், கர்த்தாவே.' அவன், 'அதைக் குறித்து நினைக்க வேண்டாம். நான் வஸ்திரங்கள் மற்றும் காரியங்களை எதிர்பார்க்கவில்லை; நான் நல்லொழுக் கத்தையே எதிர்பார்க்கிறேன். நீ என்னுடைய மனைவியாக நான்-நான்-நான் விரும்புகிறேன். நீ அவ்வாறு இருப்பாயா?' என்று சொல்லி, அவன் அவளை முத்தமிட்டான். 112. கர்த்தர் உங்களுடைய இருதயத்தில் அந்த முத்தமிட்ட போது உங்களுக்கு நினைவிருக்கிறதா, அப்போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? ஓ, என்னே. ஓ, என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் என்னுடைய வருத்தங்கள் எல்லாவற்றையும் முத்தமிட்டு அகற்றிவிட்டார், மேலும்... அவர்-அவர் அப்படியே ஏதோவொன்றை வித்தியாசமாகச் செய்தார். என்னால்... முடிந்தது என்று அவர்-அவர்-அவர் சொன்னார். நான்-நான்... ஒரு இரவிலே அவர் என்னை கலியாண விருந்திற்கு கொண்டுவரப் போவதாக இருக்கிறார். 54. எனவே அவன், 'உன்னை நீயே ஆயத்தப்படுத்திக்கொள்' என்றான். 113. வேதாகமம், 'மணவாட்டி தன்னை ஆயத்தப்பண்ணினாள்' என்று கூறுவதை நினைவுகூருங்கள். மேலும் அங்கிகள் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. உங்களுக்குப் புரிகிறதா? 114. இந்நிலையில் அந்தச் சிறு பெண்ணுக்கு வாரத்திற்கு 75 காசுகளே கிடைத்தது. ஆனால், ஓ, அவள் அந்த வருடத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். கழுவிக்கொண்டும் பாடிக்கொண்டும், தன்னால் கூடுமான ஒவ்வொரு காசையும் சேமித்துக் கொண்டிருந்தாள். அவர்களில் மற்றவர்களோ நகரத்திற்குச் சென்று புது சிகரெட்டு கட்டுகளை வாங்கிக்கொண்டும், இன்னமும், உங்களுக்குத் தெரியும், மேலும் அவர்களுடைய விஸ்கி மற்றும் புதிய சீட்டுக்கட்டுகளை தொடர்ந்து வாங்கிக்கொண்டும் தங்களுடைய பெரிய நேரத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவளோ அப்படியே மிகக்கடினமாக வேலை செய்தாள். ஏன்? அவள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், தன்னை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள். 116. அதன்பிறகு இறுதியாக, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவள் பட்டணத்திற்கு வந்து, கலியாண வஸ்திரத்தை வாங்கினாள், அவன் அவளுக்கு அனுப்பின பணத்தைப் பெற்று கலியாண வஸ்திரத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தாள். அவளுடைய பெற்றோரின் உடன் பிறந்தவரின் அந்தச் சிறிய பிள்ளைகள் அவளை கேலி செய்தார்கள். உம்ம்ம்ம். இந்த ஸ்தாபன மார்க்கம், சமூக சுவிசேஷத்தில் சிலவற்றின் வழியும் சற்றேக்குறைய அந்தவிதமாகத்தான் இருக்கிறது, அவர்கள், 'நீங்கள் கொஞ்சம் ஒருகூட்ட பரிசுத்த உருளையர்கள் தான்' என்று சொன்னார்கள். 117. நான் சமீபத்தில் இங்கே ஓரிகானில் ஒரு சிறு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவள் சொன்னாள்... அவள் வேறொரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவள். அவள், 'நல்லது, உம்முடைய கூட்டத்தாருடன் போய்க்கொண்டிருப்பதால் என்னவாகும்: அவர்கள் எப்பொழுதாவது... அவர்கள் பரலோகத்தில் இருப்பார்களானால், நான் அங்கே இருக்க விரும்பவில்லை' என்று கூறினாள். நான், 'நீ உன்னுடைய மனப்பான்மையை மாற்றிக்கொண்டாலொழிய நீ மிக அதிகமாக கவலைப்பட வேண்டியிருக்காது' என்றேன். புரிகிறதா? நான், 'நீ மிக அதிகம் கவலைப்பட வேண்டியதாய் இருக்காது' என்றேன். அதற்கு அவள், 'அங்கேயுள்ள எல்லாரும் சப்தமிட்டுக்கொண்டும் அப்படியே தொடர்ந்து செய்துகொண்டும் இருக்கிறார்கள்' என்று கூறினாள். 118. நான், 'இப்பொழுது, பொறு. நீ மரியாளை ஆராதிக்கிறவள். கன்னி மரியாள், தேவன் எப்பொழுதாவது கலியாண வஸ்திரத்தை அவளுக்கு உடுத்துவிப்பதற்கு முன்பாக, அவள் பெந்தெகோஸ்தே நாளில் மேலே சென்று, அவள் மட்டுமீறி குடித்தவளைப் போன்று அவள் தள்ளாடும் அளவுக்கு ஆவியை மிகவும் முழுவதுமாக பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏதாவது குறைவான ஒன்றைக் (கொண்டு) நீங்கள் உள்ளே வருவதில்லை' என்றேன். அதை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆம், ஐயா. 'அது தேவனுடைய தாய் என்று நீங்கள் அழைக்கிறபடி' புரிகிறதா? நான், 'கன்னி மரியாள் பெந்தெகோஸ்தேவுக்குப் போய் அவள் எப்பொழுதாவது பரலோகத்திற்குப் போகக்கூடும் முன்பாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்குமானால், குறைவான ஏதாவது ஒன்றைக்கொண்டு, நீங்கள் ஒருபோதும் பிரவேசிக்க மாட்டீர்கள். அதை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது கன்னி மரியாளாக இருந்தது' என்று கூறினேன். 'ஓ, அது அவ்வாறு இல்லை.' 119. நான், 'வேதாகமத்தை நீ விசுவாசிக்கிறாயா? இதோ அது இருக்கிறது. மரியாள் மேலறையில் அவர்களோடு கூட இருந்தாளே. அவள் ஆவியின் கீழாக நடனமாடி. யாரோ ஒருவர் மட்டுமீறி குடித்தது போன்று நடந்துகொள்ளும் அளவுக்கு ஆவியை மிகவும் முழுவதுமாக பெற்றிருந்தாள். அதைக் காட்டிலும் குறைவான ஏதாவது ஒன்றைக்கொண்டு நீங்கள் பரலோகத்திற்கு போய்ச்சேர்வீர்கள் என்று நீங்கள் நீனைக்கிறீர்களா? நீங்கள் ஒருபோதும் அவ்வாறு போய்ச்சேர மாட்டீர்கள். ஆம், ஐயா. கன்னி மரியாளும் மற்ற அவர்கள் எல்லாரும் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியில் வர வேண்டியிருந்தது' என்று கூறினேன். எனவே... ஆம், ஐயா. 120. ஜனங்கள் கேலி செய்து, அவர்களை ஒரு கூட்ட முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். பவுல், 'மதபேதம் என்று அழைக்கப்பட்ட விதத்தில்...' என்று சொன்னான். அது பைத்தியமாக இருக்கிறது. பாருங்கள், 'மதபேதம்' என்பது கொஞ்சம் 'மதபேதமாகவும், பைத்தியமாகவும், மூடத்தனமாகவும்' இருக்கிறது. நல்லது, நாம் அவ்வாறு அழைக்கப்படுகிறோம், ஏனென்றால் அவர்கள் பைத்தியமா யிருக்கிறார்கள் என்று அது ஜனங்களை நினைக்கச் செய்யும் அளவுக்கு இயற்கைக்கு மேம்பட்டவைகள் இந்த உலகத்தின் மாம்சத்திற்குரிய காரியங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாயிருக்கிறது. 121. அவர்கள் சொன்னார்கள்... ஏன், பவுல் அகிரிப்பாவிடம் சொன்னான், அவன், 'நான் பைத்தியமாயில்லை. அது...' என்றான். 'பைத்தியம்' என்பதற்கு 'பித்துபிடித்த' என்று அர்த்தமாகும். 'நான் பித்துபிடித்தவனல்ல, நான் அவ்வாறு இருப்பதாக நீங்கள் நினைத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால் மதபேதம் என்று அழைத்துக்கொள்கிற விதத்தில், எங்கள் பிதாக்களின் தேவனை நான் ஆராதிக்கிறேன்.' நானும் கூட அந்தவிதமாகத்தான் செய்கிறேன். எனக்கு அது பிடிக்கும். 'அந்த விதத்தில்...' 122. நான் பவுலோடு கரங்களைக் கோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அவன் கிறிஸ்துவினுடைய நீதியிலே அங்கி தரிப்பிக்கப்பட்டிருப்பதை நான் காணும்போது, அவன் கிரீடம் சூடப்பட்டவனாய் இருப்பதை நான் காணும்போது, அந்நாளில் நான் அங்கே இருக்க விரும்புகிறேன். அவன் கொண்டிருந்த அதேவிதமான அங்கியை நான் கொண்டிருக்க விரும்புகிறேன். அது என்னுடைய கர்த்தர் அணிந்திருந்த அதேவிதமானதாக இருக்கிறது. ஆகையால் தான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், அது இரட்சிப்புக்கு ஏதுவாக தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. சுவிசேஷமானது வார்த்தையாக மாத்திரம் வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினூடாகவும் செயல்முறையாக செய்துகாட்டப்படுதல்களின் மூலமாகவும் வந்தது. அந்தவிதாகத்தான் சுவிசேஷம் இருக்கிறது. அது வார்த்தையானது நம்முடைய இருதயங்களில் வெளிப்படுத்திக்காட்டப்படுவதாக இருக்கிறது. 123. இப்பொழுது, இந்தச் சிறு பெண், அவள் ஆயத்தப்படுத்திக் கொண்டாள். என்ன... என்பதைக் குறித்து அவள் கவலைப்படவில்லை. அவர்கள் ஏளனமாக சிரித்தார்கள். அவர்கள் நகைக்க விரும்பினால் நகைக்கட்டும். ஆனால் அந்த இரவிலே அந்த முத்தமானது ஒரு முத்திரையை அர்த்தப்படுத்தினதை அவள் அறிந்திருந்தாள். நானும் அவ்வாறு அறிந்திருக்கிறேன், நீங்களும், உங்களுக்கு அந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிற கர்த்தராகிய இயேசுவின் அந்த முத்தத்தைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் அவ்வாறே அறிந்துகொள்கிறீர்கள், அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். உலகம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து நீங்கள் கவலை கொள்வதில்லை. உங்களுடைய கசின்கள் (ஸ்ரீர்ன்ள்ண்ய்ள்) உங்களைப் பார்த்து கேலி செய்ய விரும்பி, 'நீங்கள் பைத்தியக்காரர்களாக ஆகிவிட்டீர்கள், நீங்கள் பழமைப்பாணியாக இருக்கிறீர்கள்' என்று கூறுவார்களானால், அப்படியே தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள்; அது சரியே. அவளுக்கு அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை, அவள் அப்படியே தொடர்ந்து ஆயத்தமாகிக்கொண்டேயிருந்தாள். 124. இந்நிலையில் பிறகு, இறுதியாக அந்த வேளை வந்தது, சூரியன் கீழே மறைந்து கொண்டிருந்தது. எனவே அவள் தன்னை சிறிது உடுத்திக்கொண்டாள், உங்களுக்குத் தெரியும், அவள் முழுவதும் அதிக அழகானவளாக ஆக்கிக்கொண்டு, அவள் அவ்வாறு ஆனாள். ஓ, என்னே. சபையானது சரியாக இப்பொழுது இருக்க வேண்டிய வேளை அதுவே: அவருடைய நீதியில் முழுவதுமாக அங்கிதரித்து, அவருடைய ஆவியால் நிறைந்து, அவருடைய ஜீவனால் வல்லமைபெற்று, ஒளியில் நடந்து, கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். 125. அங்கே அவள் இருந்து, தன்னை முழுவதுமாக ஆயத்தப்படுத்திக் கொண்டு, முழுவதும் துப்புரவாக்கியும் கழுவியும், கலியாண வஸ்திரத்தை அணிந்துகொண்டும் இருந்தாள். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது நெருங்குகையில், அவளுடைய சிறு பங்காளிகளிடமிருந்து அதிக இக்கட்டுகள் அவளுக்கு கிடைத்தன. அவர்கள், 'பரிதாபமான சிறிய மதிகெட்டவளே, நீ உன்னிடமே கூறக் கருதுகிறாயா, ஆர்மரின் மகன் யாரோ ஒருவரை திருமணம் செய்வான் என்றால், அவன் எங்களைப் போன்ற யாரோ ஒருவரைத் தான் திருமணம் செய்திருப்பான், அவனுடைய சமுதாயத்தில் தகுதிவாய்ந்த யாரோ ஒருவரை, அவர்களைக் குறித்து கொஞ்சம் வசீகரிக்கும் அழகைக் கொண்டிருந்து, கல்வியை உடைய யாரோ ஒருவரைத் தான் திருமணம் செய்வான்' என்று சொன்னார்கள். பாருங்கள், இன்றைக்கு சபையும் அவ்வாறு தான் நினைக்கிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அது சரியே. அவர்கள் முற்றிலும் தவறாக இருக்கிறார்கள். அவர்கள்... 126. இந்நிலையில், அதன்பிறகு கொஞ்ச நேரம் கழிந்த பிறகு, அவள்... அவர்கள்... அவன் தாமதம் செய்வதாக அவள் எண்ணினாள். தாமதமாகி தாமதமாகிக்கொண்டே போனது. இறுதியாக, அவர்கள், 'ஓ, அவன் எங்கே?' என்றார்கள். இன்றும் அவர்கள் அவ்வாறு தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 'அந்த ஒருவர் எங்கே. அவர் வருகிறார் என்ற அந்த முட்டாள்தனமான பேச்சை நான் நாற்பது வருடங்களுக்கு முன்பே கேட்டிருக்கிறேன். அது எங்கேயிருக்கிறது?' என்று கூறுகிறார்கள். 127. அவர்கள், 'கர்த்தருடைய அந்த வருகை எங்கே. எல்லா காரியங்களும், அது ஆதியிலிருந்தது போன்று அப்படியே இருக்கிறதே?' என்று கூறுவார்கள் என்று வேதாகமம் சொல்லவில்லையா? நண்பர்களே, நாம் அந்த நாளில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிற்பகலில் நாம் ஒன்றாக இருக்கையில், இப்பொழுது நாம் திடன்கொண்டிருப்போம். ஒரு புதிய தைரியத்தோடு வெளியே போங்கள். ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும்படி வெளியே செல்லுங்கள். ஆயத்தமாகுங்கள். வருகை சமீபமாயுள்ளது. 128. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் எல்லாரும் அவளைச் சூழ்ந்துகொண்டு, நடனமாடவும், அவளைச் சுற்றி சிறு பாடல்களைப் பாடவும் தொடங்கி, 'ஓ, நாம் இவளைக் கேலிசெய்வோம்' என்றார்கள். உங்களுக்குத் தெரியும். மணப்பெண்ணைப் போன்று செய்து அவர்கள் ஒரு மணப்பெண்ணாக பாசாங்கு செய்து காட்டினார்கள். அது அவளை தொந்தரவு செய்யவேயில்லை. அந்தச் சிறிய பழைய கடிகாரம் சுற்றிவந்து டிக் டிக் ஒலி எழுப்புவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அது சற்று ஏறக்குறைய ஒரு நிமிடமாக இருந்தது. யாரோ ஒருத்தி, 'நீ... அவன் இங்கே இன்ன இன்ன நேரத்தில் இருக்கப் போகிறான் என்று நினைத்தேன்' என்றாள். 129. அதற்கு அவள், 'கவலைப்பட வேண்டாம், அவர் இங்கே இருப்பார்' என்று கூறுகிறாள். நான் அறிந்துகொள்ள விரும்புவது அவ்வளவு தான். அவர் இங்கே இருப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நான் அறிந்துகொள்ள விரும்புவது அவ்வளவு தான். அவர் வருகிறார்; அவ்வளவு தான். எப்போது, எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இங்கே இருப்பார். 130. சரியாக அவர்கள் ஏளனம் செய்து, அவளைக் குறித்து இந்த வித்தியாசமான காரியங்களை எல்லாம் சொல்லி, அவளைக் கேலி செய்தும், அவளை கிண்டலும் மற்றும் எல்லாவற்றையும் செய்தும் கொண்டிருக்கையில், ஒன்று வந்து கொண்டிருக்கும் சக்கரங்களின் சத்தத்தைக் கேட்டார்கள், குதிரைகளின் குளம்புகளால் ஏற்படும் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள், அந்த நான்கு சக்கர திறந்த குதிரை வண்டியின் கீழாக மணலை உரசித்தேய்த்தபடி அது வந்து கொண்டிருந்தது. என்னே, என்னே, அவள் அந்த நல்வாய்ப்பை வென்றுவிட்டாள். வெளியே முற்றத்திற்குள் போனாள். அது யாராக இருந்தது? அவன் அங்கே வஸ்திரம் தரித்தவனாயிருந்தான். வண்டி ஆயத்தமாக இருந்தது. அவள் அவ்விதமாக முற்றத்தின் ஓரத்திலிருந்த அந்தச் சிறிய குறுக்கு கம்பி பின்னல் அமைவின் ஊடாக ஓடினாள். அவனோ அந்த வண்டியை விட்டு வெளியே குதித்து, தன்னுடைய கரங்களுக்குள்ளாக அவளைப் பற்றிக்கொண்டு, அவன், 'இனியஇருதயமே, வருடம் முழுவதும், உன்னை கண்காணித்துக் கொண்டிருப்பதற்கு ஜனங்களை வைத்திருந்தேன்' என்று கூறினான். ஓ, நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர்: கண்கள் சிட்டுக்குருவியின் மேல் இருக்கிறது, அவர் என்னைக் கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன். 'வருடம் முழுவதும், நான் உன்னை கவனித்து வருகிறேன். நான் உன்னுடைய நற்குணங்களைக் கண்டேன். மற்ற மனிதர்களுடைய காதல் விளையாட்டுகளைக் கண்டேன். நான் இவை எல்லாவற்றையும் கண்டேன், ஆனால் நீ உண்மையாக இருந்ததைக் கண்டேன். ஓ, நான் திருமணம் செய்யப் போகிறவளாக இருந்த பெண் உண்மையாக இருந்தாள் என்பதை அறிந்துகொள்ளும் போது, அது என்னுடைய இருதயத்தை பொங்கும்படி செய்தது.' 132. தேவனே, அது எங்களுடைய சாட்சியாக இருக்கட்டும், இன்று அது எங்களுடைய வாஞ்சையாக இருக்கட்டும். கிறிஸ்துவுக்கு உண்மையாக ஜீவியுங்கள். அழைப்புக்கு உண்மையாக இருங்கள். ஆவியானவருக்கு உண்மையாக இருங்கள். 133. அவன் அவளைத் தன் கரங்களில் பற்றிக்கொண்டு, அவளை மேலே அந்த நான்கு சக்கர திறந்த குதிரை வண்டியில் (க்ஷன்ஸ்ரீந்க்ஷர்ஹழ்க்) அமரவைத்து, வண்டியைத் திருப்பி தூரமாக சிகாகோவை நோக்கி செலுத்தி, 'நீ வேலை செய்திருக்கிறாய், கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறாய், சுடப்பட்டு உண்டான புண்ணுள்ள உன்னுடைய சிறிய கரங்கள் மீண்டும் ஒருபோதும் சுடப்பட்டு புண்ணுண்டாகாது. வீட்டிற்கு வெளியே நீ செய்திருக்கிற காரியங்களை நீ மீண்டும் ஒருபோதும் வீட்டிற்கு வெளியில் செய்ய வேண்டியிருக்காது. சிகாகோவிலுள்ள லேக்சைட் டிரைவ்வில் விலைக்கு வாங்கக் கூடியதிலேயே கம்பீரமான வீடுகளில் ஒன்று உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது திருமணம் செய்து அங்கே போய் உன்னுடைய மீதமுள்ள நாட்களில் சமாதானமாக வாழப்போகிறோம்' என்று கூறினான். 134. நாம் வேலை செய்தும் கஷ்டப்பட்டு உழைத்தும், வெளிப்புறத்திலிருந்து உமிழப்படுவதையும் முகச்சுளிப்புகளையும், ஏளனம்செய்யப்படுவதையும் மற்றும் எல்லாவற்றையும் கொண்டிருப் பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், ஆனால் என்றாவது ஒருநாள் அவர் வருவார். ஓ, நாம் அவரை ஆகாயத்தில் சந்திக்க அவரோடு கூட மேலே எடுத்துக்கொள்ளப்படுவோம். அந்தச் சிறு வயதான பங்காளிகள் அப்படியே அங்கே நின்றுகொண்டு நோக்கிப்பார்த்தார்கள். ஓ, இந்நாட்களில் ஏதோ ஒன்றில், நாம் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம். கலியாண வஸ்திரம் தரித்திருக்கிறவர்களாகிய அவருடைய மணவாட்டியை தேவன் ஆகாயத்தில் எடுத்துக்கொள்வார். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 135. கர்த்தாவே, அது நெருங்குகையில், எங்களை தூரமாக எடுத்துச்செல்வதற்காக இரதமானது வரும் அந்த சத்தம் இரவுக்கு முன்பாகவே வராதென்று எங்களுக்கு எப்படி தெரியும். ஓ, நாம் ஆயத்தமாக இருப்போமாக, அங்கிகள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டு, சுவிசேஷத்தைக் கொண்டு நறுமண மூட்டப்பட்டு, மணவாளனை ஆகாயத்தில் போய் சந்திக்க ஆயத்தமாக இருப்போமாக. நாம் அவருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் விசுவாசிப்போமாக. அந்தச் சிறு பெண்ணைப் போல, அவன் செய்த ஒவ்வொரு வாக்கையும் உண்மை என்று அவள் விசுவாசித்தாள். மேலும், கர்த்தாவே, நீர் செய்கிற ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உண்மை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்களுடைய மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டீர், எங்களுடைய அக்கிரமங் களினிமித்தம் நொறுக்கப்பட்டீர்; எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை உம்மேல் வந்தது, உம்முடைய தழும்புகளால் குணமானோம். ஓ, கர்த்தாவே, வியாதியோடும் துன்பத்தோடும் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, தேவனுடைய வாக்குத்தத்தம் இல்லையா... ஓ, பரிசுத்த ஆவியானவர் தாமே உள்ளே பிரவேசித்து, அவர்களைச் சுற்றிலும் அங்கியை மேல்நோக்கி வைத்து, 'இது நான் தான், பிள்ளைகளே. உங்களுடைய வியாதிகள் எல்லாவற்றையும் சுகப்படுத்துகிற கர்த்தர் நானே. உங்களுடைய துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, உங்களுடைய சரீரங்களிலிருந்து வியாதியை அகற்றிப்போடுவதற்கு இப்பொழுது இங்கேயிருக்கிறேன்' என்று கூறுகிறார். இதை அருளும், கர்த்தாவே. இவர்கள் தாமே, அந்தச் சிறு பெண்ணைப் போல, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் கனத்தைக் கொண்டுவரும்படிக்கு அப்படியே உண்மையுள்ளவர்களாக இருப்பார்களாக... சரியாக இப்பொழுதே, பரிசுத்த ஆவியானவர் தாமே, இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துவாராக, நீர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக கல்வாரியில் இவர்களைச் சுகப்படுத்தி விட்டீர் என்று நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உரைக்கிறேன். தேவனே, இவர்கள் எல்லாரும் சுகமடைந்து ஆசீர்வதிக்கப்படுவார்களாக. 137. இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு பணியாளரும், அவர் ஒரு ஊழியக்காரராக இருந்தாலும், அவர்கள் தெருவில் கைப்பிரதிகளை விநியோகிப்பவர்களாக (ல்ஹள்ள்) இருந்தாலும், அவர்கள் பத்திரிகையை வெளியிடும்படியாக வேலை செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் என்ன செய்தாலும், கர்த்தாவே, அவர்களுடைய உழைப்பு கர்த்தருக்குள்ளாக வீணாக இல்லை என்பதை அவர்கள் தாமே அறிந்துகொள்வார்களாக. அவருடைய நீதியாகிய அந்த நல்ல அங்கியை தங்களைச் சுற்றிலும் அவர்கள் அப்படியே உணருவார்களாக, அவர்கள் தாமே கர்த்தருடைய சந்தோஷங்களுக்குள் பிரவேசிப்பார்களாக. இதை அருளும், பிதாவே. ஏற்ற காலத்தில், அவர்கள் அறுப்பார்கள் என்பதின் நிமித்தமாக, அவர்கள் தாமே நற்காரியங்களைச் செய்வதில் சோர்ந்து போகாதிருப்பார்களாக. 138. பிதாவே. இந்த முக்கியத்துவத்தைப் பார்த்து, அந்த வஸ்திரத்தை தரித்திராதவர்கள் இங்கே இருப்பார்களானால், அந்நாளில் இராஜா, 'இங்கே எப்படி உள்ளே வந்தாய், நீ ஒரு திருஷ்டாந்தத்தைக் கொண்டிருந்தாய். நீ என்னுடைய உவமைகளைக் கொண்டிருந்தாய். நீ செய்தியைப் கேட்டாய். நீ அதை வார்த்தையில் வாசித்தாய். பெந்தெகோஸ்தேயில் அந்த வாசல் வழியாக முதலாவது வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீ கண்டாய். அந்தவிதமாகத்தான் அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தவிதமாகத்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். அந்தவிதமாகத்தான் அவர்கள் அதைக் கொண்டிருந்தார்கள். அந்த ஜீவியங்களைத் தான் அவர்கள் ஜீவித்தார்கள். இதோ நீ இங்கேயிருந்து ஒரு ஸ்தாபன அனுமதிச்சீட்டையோ அல்லது வேறு ஏதோவொரு சமயக்கோட்பாட்டு முறையையோ, அல்லது ஏதோவொன்றையோ எனக்கு முன்பாக வைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறாயா? நீ கட்டாயமாக மறுபடியும் பிறந்து, ஆவியினால் நிறையப்பட்டாக வேண்டும்' என்று கூறுவதை அவர்கள் கேட்பார்கள். 139. ஓ தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் கடைசி மணி வேளைகளில் இருக்கிறோம் என்பதையும் எங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்தில் வருகிறார் என்று அறியாமல் இருக்கிறோம் என்பதையும் பார்த்து மனிதர்கள் நடுங்குவார்களாக. இதை அருளும், பிதாவே. இது ஒரு முக்கியமான நேரமாக இருந்து, மனிதர்களும் ஸ்திரீகளும், வாலிப ஜனங்களும் வயதானவர்களும் இந்த நேரத்தில் வந்து கர்த்தராகிய இயேசுவின் நீதியிலே அங்கி தரித்தவர்களாக இருக்கும்படியாக தீர்மானம் செய்வார்களாக. 140. நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கி, எங்களுடைய கண்களை மூடியிருக்கையில், விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் கலியாண வஸ்திரம் தரித்திராமல் இருக்கிறவர்கள் இங்கேயிருப்பார்களானால், ஆனால் அந்த கலியாண வஸ்திரத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இன்னும் கோபத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் இன்னுமாக சுயநலத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் இன்னுமாக நீதிமான்களை குறைகூறுகிறீர்கள்; இன்னுமாக உங்களால் தேவனுடைய வார்த்தை உண்மையாக இருப்பதை விசுவாசிக்க முடியவில்லை. வேதாகமம் அவ்வாறு கூறுகிற காரணத்தினால், அதில் சில தான் உண்மையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். மேய்ப்பர் அவ்வாறு கூறின காரணத்தினால் மற்றவர்கள் உண்மையாயில்லை என்று கூறுகிறீர்கள். வேதாகமமோ, 'ஒவ்வொரு மனுஷனுடைய வார்த்தையும் பொய்யாகவும் என்னுடையது உண்மையாகவும் இருப்பதாக' என்று கூறுகிறது, இயேசு அவ்வாறு கூறினார். உங்களால் இன்னுமாக அதை விசுவாசிக்க முடியவில்லை, நீங்கள் வந்து இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா. 141. நீங்கள் அவரை அறியாமல் இருப்பீர்களானால், உங்கள் கரத்தை உயர்த்தி, 'சகோதரன் பிரன்ஹாமே, அது நான்' என்று கூறுவீர்களா. உள்ளேயோ அல்லது இந்தக் கட்டிடத்திற்கு வெளியிலோ. நீங்கள் எங்கேயிருந்தாலும், உங்கள் கரத்தை உயர்த்தி, 'நான் அந்த அங்கியை அணிந்திருக்கவில்லை' என்று கூறுங்கள். வெட்கப்பட வேண்டாம், ஏனென்றால் அந்நாளில் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அதிக சங்கடமான நிலையாக அது இருக்கப் போகிறது. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே வேறொருவர் இருக்கிறீர்களா, அங்கே வெளியே இருக்கிறீர்களா, உங்கள் கரத்தை உயர்த்தி, 'சகோதரன் பிரன்ஹாமே, நான் ஆயத்தமாக இல்லை. நான் ஆயத்தமாக இல்லை என்று தேவன் அறிவார். நான் தேவனை நோக்கி என்னுடைய கரங்களை உயர்த்துவேன்' என்று கூறுங்கள். மிகவும் பின்னாலுள்ள ஐயா, உங்களை ஆசீர்வதிப்பாராக. 142. சாந்த குணமும் தயவையும் உடைய அந்த ஆவியை நீங்கள் தரித்திருக்கவில்லை. அவர்கள் ஒரு பக்க முகத்தில் அறைந்தால், உண்மையில் மறுபக்கத்தையும் உங்களால் திருப்பிக்காட்ட முடியும். உங்களை தொந்தரவு செய்கிற காரியங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். 143. நீங்கள், 'நல்லது, சகோ-சகோதரன் பிரன்ஹாமே, நான் வருடக்கணக்காக பரிசுத்த ஆவியை உரிமை கொண்டாடி வருகிறேன்' என்று கூறுகிறீர்கள். 144. ஆனால் பரிசுத்த ஆவியின் கனிகள் அங்கே இல்லை என்றால், அப்படியானால் நீங்கள் தவறான அங்கியை உடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் கனியானது தானாகவே சாட்சிகொடுக்கிறது... அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரியே, உங்களுக்கு நன்றி, வயதாகவும் நரைமுடி கொண்டவர்களாகவும், ஒருவேளை ஒரு சபையின் அங்கத்தினராக இருந்தும் கூட, ஆனாலும் கரங்களை உயர்த்துகிறீர்கள். 145. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, கர்த்தர் வருவதற்கு முன்பாக நான் கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ள விரும்புகிறேன். நான் இந்த நிலையிலேயே பிடிக்கப்பட விரும்பவில்லை' என்று கூறுங்கள். 146. நீங்கள் அந்தவிதமாக உணருவீர்களானால், நாம் நம்முடைய தலைகளை வணங்கி, இந்த சகோதரன் நமக்கு பியானோ இசைக்கருவியில் அப்படியே ஒரு சிறிய இசைத்தந்தியைக் கொடுக்கையில், நீங்கள் இங்கே நெடுக நிற்பீர்களா என்று வியப்படைகிறேன், இந்தச் செய்தியைப் பிரசங்கம் பண்ணின பிறகு, நான் அப்படியே ஒரு சில நிமிடங்கள் உங்களோடு கூட ஜெபம் செய்யட்டும். நீங்கள் இப்பொழுது சரியாக இங்கே வரமாட்டீர்களா? சரியாக... இருங்கள். சரியாக இங்கே இந்தப் பீடத்தைச் சுற்றிலும் நின்று, 'சகோதரன் பிரன்ஹாமே. பரிசுத்த ஆவியானவராகிய அந்த அங்கியானது என்மேல் இருக்க விரும்புகிறேன். எனக்கு--எனக்கு அது தேவை' என்று கூறுங்கள். நீர் அருகில் உள்ளபோது, சோதனைகள் தங்கள் வல்லமையை இழந்துவிடுகின்றன. நீர் எனக்குத் தேவை, ஓ, நீர் எனக்குத் தேவை; ஒவ்வொரு... எனது சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரியாக...?... மத்தியில் நின்று கொண்டிருக்கிற உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக, நீங்கள் விரும்பினால். இப்பொழுது வாருங்கள். வெளியேயும், உள்ளேயும், நீங்கள் எங்கிருந்தாலும்... இப்பொழுது இங்கே மேலே வாருங்கள். அது சரி. மீதமுள்ள (மற்றவர்களுடன்) வாருங்கள். நாங்கள் வருகிறோம்... (சரியாக இப்பொழுது இங்கே நெடுகிலும் வந்து நீங்கள்...?...) நீர் எனக்குத் தேவை, (சரியாக மேலே வாருங்கள். சரியாக நீங்கள் இருக்கிற வண்ணமாகவே வாருங்கள்.) நான் உம்மிடம் வருகிறேன். ஒவ்வொரு மணிவேளையும் நீர் எனக்குத் தேவை, மிகவும் கிருபையுள்ள கர்த்தாவே; சரியாக மேலே வாருங்கள், சரியாக அந்த மனிதரைக் கொண்டு வாருங்கள். கண்ணீர்கள்... 147. வெளியிலும் கூட. சரியாக மேலே வாருங்கள். இப்பொழுது பீடம் நிரம்பிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவினுடைய அங்கியை உடுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள், நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பரவாயில்லை, அதற்கு இதனோடு சம்பந்தமில்லை. நீங்கள் அங்கி தரிக்கப்படாமல் இருந்தால், இப்பொழுதே வேகமாக வாருங்கள். (இது) உங்களுடைய கடைசி வாய்ப்பாக இருக்கலாம். ஓ, நீர் எனக்குத் தேவை, ஒவ்வொரு மணிநேரமும்... 148. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு அழைப்பிதழைப் பெற்றிருக்கிறேன்' என்று கூறலாம். அப்படியானால் வேகமாக வந்து, அங்கியை அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு அழைப்பிதழைப் பெற்றிருக்கிறீர்கள், வந்து உங்கள் அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் மீட்கப்படும் நாள் மட்டுமாக முத்திரையிடப்படுகிறீர்கள். நான் உம்மிடம் வருகிறேன்! நீர் எனக்குத் தேவை... நான்... இப்பொழுது அவர் உங்களுக்கு தேவையாயிருக்கிறாரா? என்றாவது ஒருநாள் அவர் உங்களுக்கு தேவையாயிருக்கப் போகிறார். இப்பொழுது அவருக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். நீர் எனக்குத் தேவை! என் இரட்சகரே, ஓ இப்பொழுதே என்னை ஆசீர்வதியும், நான் உம்மிடம் வருகிறேன்! 149. இசையானது இசைக்கப்பட்டு, ஜனங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கையில், அப்படியே வெளிப்புறத்திலிருந்து சரியாக உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள்; சரியாக வேகமாக வாருங்கள். நீங்கள் கொஞ்சம் குறுக்காக நடந்து வர விரும்பினால், இங்கே பீடத்தின் மறுபக்கத்தில் கொஞ்சம் இடம் உள்ளது. இந்த மறுபக்கத்திலிருந்து இந்த மற்ற வழியாக சரியாக கீழே இறங்கி வாருங்கள். சரியாக உள்ளே வந்து இங்கே இந்தப் பக்கத்திற்கு வந்து, சரியாக பீடத்தைச் சுற்றிலும் முழங்கால்படியிடுங்கள். நீங்கள் ஒரு அழைப்பிதழைப் பெற்றிருக்கிறீர்கள். நிச்சயமாகவே உங்களிடம் இருக்கிறது. இப்பொழுது வந்து, முத்திரையிடப்படுங்கள். 150. இப்பொழுது, வேதவாக்கியம், எபேசியர் 4:30 இவ்வாறு கூறுகிறது: 'நீங்கள் உங்களுடைய மீட்கப்படும் நாள் மட்டுமாக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்' என்று. எவ்வளவு காலம் வரைக்கும்? உங்களுடைய மீட்கப்படும் நாள்மட்டுமாக. நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும்போது, எகிப்தியர்களை அழிக்கப்போவதாக இருந்த வெளியிலிருந்த அவர்களின் கொள்ளைநோய்களிலிருந்து, இஸ்ரவேலர் இரத்தத்தின் கீழே வந்து, அவர்கள் உள்ளே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும், காப்பாற்றப்பட்டவர்களாகவும் இருந்தது போன்று, நீங்கள் உள்ளே வருகிறீர்கள். இப்பொழுது இரத்தத்தின் வழியாக கிறிஸ்துவுக்குள் வந்து, கலியாண வஸ்திரத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வரும்படியாக கிறிஸ்து ஒரு அழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஒருக்கால் நீங்கள் வருடக்கணக்காக ஏதோவொரு சபையில் பயபக்தியோடு கூட தொடர்ந்து போய்க்கொண்டிருந்திருக்கலாம். இப்பொழுது வாருங்கள். உங்களுடைய அழைப்பிதழை அவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக அவருடைய நீதியில் அங்கி தரிப்பிக்கப்படுங்கள். நீங்கள் வரமாட்டீர்களா? நீர் அருகில் இருக்கும்போது. நீர் எனக்குத் தேவை, ஓ, நீர் எனக்குத் தேவை; ஒவ்வொரு மணிநேரமும் நீர் எனக்குத் தேவை! என் இரட்சகரே, ஓ இப்பொழுது என்னை ஆசீர்வதியும், நான் உம்மிடம் வருகிறேன்! 151. இப்பொழுது, இசையானது மென்மையாக இசைத்துக் கொண்டிருக்கையில், மிகவும் பயபக்தியாக இருங்கள். எல்லாரும் வருவது முடிந்து விட்டிருந்தால், நான் இப்பொழுது ஜெபிக்க விரும்புகிறேன். கிறிஸ்தவ நண்பனே, இப்பொழுது சற்று ஞாபகம் கொள், இது கடைசி சந்தர்ப்பமாக இருக்கலாம். நான் தங்கியிருக்கிற இடத்தில், நான் ஆம்புலன்ஸ் சப்தமிடுவதை எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் அங்கே இருந்தது முதற்கொண்டு, இப்பொழுது ஏறக்குறைய 12 நாட்கள் ஆகிறது, ஏறக்குறைய பகலிலும் இரவிலும், ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்குள்ளும் ஒரு ஆம்புலன்ஸ் சத்தம் அங்கே இருக்கிறது. அதைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். ஓ, கர்த்தாவே, நீர் எனக்குத் தேவை. 152. உங்களுடைய நேரம் முடிவுக்கு வர எவ்வளவு காலம் ஆகும்? எப்போது என்று உங்களுக்குத் தெரியாது. நண்பனே, இதன் பேரில் நிச்சயமில்லாமல் ஏதோவொன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டாம். ஓ, நீங்கள் இங்கேயிருந்து, நீங்கள் சரியாக இல்லை என்று அறிந்து, பரிசுத்த ஆவியானவர் இனிமேலும் உங்களோடு இடைபடாதபடியாக உங்களுடைய இருதயத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரை மிக அநேக முறைகள் துக்கப்படுத்தியிருக்கிறீர்களா? இந்த பலவீனமான சிறிய அழைப்போடு நான் திடீர்உணர்வுதாக்கம் கொள்கிறேன். அவருடைய ஆவி எப்போதுமே மனுஷனோடு போராடாது என்பது உங்களுக்குத் தெரியும். என்றாவது ஒருநாள் அது போராடுவதை நிறுத்தப்போகிறது. உங்களால் அப்படியே... முடியும். அவர் தட்டி, நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறி, தட்டி, நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்று உங்களிடம் சொல்ல முடிந்தாலும், நீங்கள் தொடர்ந்து அது தட்டுவதை தட்டிக்கழித்து (விலக்கி) விடுவீர்கள் என்றால், சற்று கழிந்த பிறகு, அது அதற்கு மேலும் எந்தவிதத்திலும் வராது. 153. கொஞ்ச காலத்திற்கு முன்பு, கீழே தெற்கிலுள்ள ஒரு பாப்டிஸ்டு சபையில் ஒரு வாலிப பெண்ணிடம் பேசினேன். அவள் பின்னால் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, 'வாலிப பெண்ணே' என்றேன், சபை... பிறகு. ஓ, நான் பீட அழைப்பின்போதுள்ளதை குறிப்பிடுகிறேன், நான், 'நீ வந்து உன்னுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்குக் கொடுக்க மாட்டாயா?' என்றேன். ஓ, என்னே, அப்போது அவள் என்னிடம் கோபப்பட்டாள். ஆராதனைக்குப் பிறகு, அவள் என்னை வாசலண்டையில் சந்தித்தாள். அவள், 'திரு. பிரன்ஹாம் அவர்களே, இங்கே கவனியும். நான் அந்த சங்கடப்படுத்துகிற ஏதோவொன்றை பாராட்டவில்லை, நீர் என்னை அழைத்து என்னை நோக்கி உம்முடைய விரலைச் சுட்டிக்காட்டுகிறீரே' என்றாள். அதற்கு நான், 'அதைச் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் தான் என்னிடம் சொன்னார். நீ தேவனோடு சரியாக இல்லை என்பதை அறிவாய்' என்று கூறினேன். அவள், 'அது - என்னுடைய வேலை. நான் மிகவும் வாலிபமாக இருக்கிறேன். நான் இன்னும் கொஞ்சம் வாழ்க்கையைக் கண்டாக வேண்டும்' என்றாள். அதற்கு நான், 'வாலிப பெண்ணே, நீ ஒருக்கால் உன்னுடைய-உன்னுடைய கர்த்தரை உன் இருதயத்திலிருந்து கடைசி தடவையாக துக்கப்படுத்தியிருக்கலாம்' என்று கூறினேன். அவள், 'என்னுடைய தகப்பனார் அந்தச் சபையில் ஒரு டீக்கனாக இருக்கிறார்' என்றாள். அதற்கு நான், 'உன்னுடைய தகப்பனார் அந்தச் சபையில் மேய்ப்பராக இருந்தால், அது ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பரிசுத்த ஆவியானவர் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்; நீ அதை ஏற்றுக்கொள்வது தான் நல்லது. நீ அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் உன்னால் முடியாத நிலையை உடைய ஒரு நேரம் வரலாம்' என்று கூறினேன். அவள் என்னைக் கேலி செய்தாள். தன்னுடைய - ஒப்பனை உடைய (வர்ணம் பூசப்பட்ட) அந்தச் சிறிய உதடுகளோடு கர்வம் கொண்டவளாக தன்னுடைய தலையை அந்தவிதமாக திருப்பிக்கொண்டு, திமிராக அங்கிருந்து நடந்து சென்று விட்டாள். 154. ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து (அது மெம்பிசில் நிகழ்ந்தது.) நான் தெருவில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தேன், அப்போது நான் அதே வாலிப பெண்ணைக் கண்டேன் - அவள் ஒரு அருமையான வீட்டிலிருந்து வந்தவள் - அவளுடைய அடியிலுள்ள பாவாடைகள் கீழே தொங்கிக்கொண்டிருக்க, தன்னுடைய வாயில் ஒரு சிகரெட்டோடு கூட தெருவில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். நான் அவளிடமாக மேலே நடந்துசென்று, 'எப்படியிருக்கிறாய்' என்றேன். அதற்கு அவள், 'ஹலோ, பிரசங்கியாரே' என்று கூறிவிட்டு, அவள் அவ்விதமாக என்னை நோக்கிப்பார்த்தாள், மேலும் அவளுடைய... அவள் பாதி குடித்திருந்தாள். 'ஒரு சிகரெட்டை எடுத்துக்கொள்ளும்' என்றாள். நான், 'உன்னைக் குறித்தே உனக்கு வெட்கமாயில்லையா' என்றேன். 'ஒருக்கால்...' என்றாள். கீழாக தன்னுடைய பணப்பையில் (ல்ன்ழ்ள்ங்) கைநீட்டி, 'ஒருக்கால் நீர்-நீர்-நீர் என்னுடைய பாட்டிலிலிருந்து மதுபானம் எடுத்துக்கொள்ளும்' என்று கூறினாள். அதற்கு நான், 'உன்னைக் குறித்தே உனக்கு வெட்கமாயில்லையா' என்றேன். நான் அவளைத் தோளில் பிடித்துக்கொண்டு, நான், 'உன்னுடைய தகப்பனார் இன்னும் டீக்கனாக இருக்கிறாரா?' என்று கேட்டேன். 155. அவள், 'நான் ஒரு வருடமாக அவரைக் குறித்து கேள்விப் படவில்லை. பிரசங்கியாரே, நான் ஒரு காரியத்தை உம்மிடம் சொல்ல விரும்புகிறேன்' என்றாள். அவள் ஒரு சிகரெட்டை வெளியே எடுத்து, அதில் கொஞ்சம் சிறிதளவு போதை மருந்தை வைத்து, புகைக்கத் தொடங்கினாள், அவளுடைய நரம்புகள் அமைதிப்பட்டது. நான் அந்த மூலையில் நின்றுகொண்டு அவளை நோக்கிப்பார்த்தேன். அவள், 'அந்த இரவிலே அந்த ரோஜா மலர் புதர்களுக்கு அருகில் நீர் என்னிடம் என்ன சொன்னீர் என்று உமக்குத் தெரியுமா?' என்றாள். நான், 'நான் அதை ஒருபோதும் மறக்கமாட்டேன்' என்றேன். 156. அவள், 'நீர் என்னிடம் சத்தியத்தையே கூறினீர். நீர் அதை எங்கு கூற வேண்டுமானாலும் அதை உம்மால் கூற முடியும். ஆனால் அந்த இரவு முதற்கொண்டு...' என்று கூறினாள். உங்களுடைய முதுகில் மிகவும் கிளர்ச்சியூட்டி உணர்ச்சிவசப்பட்டவர்களாக உணரச்செய்யும் குறிப்புரையை நான் இப்பொழுது சொல்லப்போகிறேன். அவள், 'அந்த இரவு முதற்கொண்டு... அது என்னுடைய கடைசி அழைப்பாக இருந்தது என்ற சத்தியத்தை நீர் என்னிடம் கூறினீர். நான்... என்னுடைய தாயாரின் ஆத்துமா நரகத்தில் தட்டையான பணியார வகையைப் போன்று பொறிக்கப்படுவதையும், அதைப் பார்த்து சிரிப்பதையும் என்னால் காண முடியும் அளவுக்கு, என்னுடைய இருதயமானது மிகவும் கடினமாக இருந்து வருகிறது' என்றாள். 157. அது அப்படியே என்னை சோர்வடையச் செய்தது. நான் அப்படியே திரும்பி அழுதவாறு தெருவில் கீழாக நடந்து போனேன். என்னால் அதை தவிர்க்க முடியாதிருந்தது. ஒரு அருமையான வாலிப பெண். 158. 'என் ஆவி எப்போதும் மனுஷனோடு போராடாது.' நீங்கள் உங்களுடைய இருதயத்தில் மிகவும் சின்னஞ்சிறிய அழைப்பைப் பெற்றிருக்கும் போது...' ... கொண்டு வாருங்கள். இங்கு மேலே வேகமாக வந்துவிடுங்கள், இதுதான் அந்த இடம். இன்னும் ஒருமுறை, அதன்பிறகு நாம் ஜெபம் செய்வோம். நீர் எனக்குத் தேவை, ஓ, நீர் எனக்குத் தேவை; ஒவ்வொரு மணிநேரமும் நீர் எனக்குத் தேவை! ஓ ஆசீர்வதியும்... நான்... 159. ஏறக்குறைய ஐந்து வருடங்கள் கழித்து, என்னுடைய நண்பராகிய ஒரு பாப்டிஸ்டு மேய்ப்பர் அவளுடைய அடக்க ஆராதனையில் பிரசங்கம் பண்ணினார். அவள் நகரத்திற்கு வெளியேயுள்ள சாலையில் அமைந்துள்ள ஒரு இரவுநேர கேளிக்கைவிடுதியில் நடந்த ஒரு சண்டையில் கொல்லப்பட்டாள். மேலும் ஜ்ட்ங்ய் அவளுடைய வயதான தகப்பனார்... அவர்கள் அவளுடைய சரீரத்தை வெளியே வாசலில் உருட்டிக்கொண்டிருந்தார்கள், அவர் தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிலும் ற்ட்ழ்ங்ஜ் செய்துகொண்டு சொன்னார்... அவளை முத்தமிட்டுக்கொண்டு, 'என்றென்றைக்குமாக போய் வா, செல்ல பிள்ளையே' என்றார். என்றென்றைக்குமாக? என்றென்றைக்குமாக! நீர் எனக்குத் தேவை, ஓ... (நண்பனே, நீ வரமாட்டாயா?) ஒவ்வொரு மணிநேரமும் நீர் எனக்குத் தேவை; எனது இரட்சகரே, ஓ இப்பொழுது என்னை ஆசீர்வதியும், பர்... 160. கர்த்தராகிய இயேசுவே, எனக்குள்ளிருக்கும் எல்லாவற்றைக் கொண்டும், இந்த ஜனங்கள் கட்டாயமாக கர்த்தராகிய இயேசுவின் நீதியிலே அங்கி தரித்திருக்கப்பட வேண்டும் என்று இவர்களிடம் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, இவர்களில் அநேகர் ஏற்கனவே அங்கிதரிப்பிக்கப்பட்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கே பீடத்தைச் சுற்றிலும் முழங்கால்படியிட்டிருக்கிற அநேகர், இப்பொழுது இவர்களுடைய இருதயங்கள் மிருதுவாக உள்ளன. தேவனுடைய ஆவி அழைத்துக் கொண்டிருப்பதைக் கேட்கக்கூடும்படியாக இது போதுமான அளவுக்கு மென்மையாக உள்னது. "என் பிதா முதலில் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமுடியாது' என்று எழுதப்பட்டுள்ளது. 161. இப்பொழுது இதோ இவர்கள் தங்களுடைய அங்கிக்காக பீடத்தைச் சுற்றிலும் ஆயத்தமாயிருக்கிறார்கள். உம்மால் மாத்திரமே அதைச் செய்யக்கூடும்படி இருக்கும் காரணத்தால், பரிசுத்த ஆவியானவராகிய நீர் மென்மையாகவும், இனிமையாகவும் கனிவாகவும், இந்தச் சிறியவர்களைச் சுற்றிலும் உமது கரத்தைப் போட்டு, இவர்களை நித்தியமாக முத்திரையிடும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுடைய அன்பின் உண்மையான ஐசுவரியங்களாகிய இந்த அனுபவத்திற்குள் இவர்களை வழிநடத்தும். அப்பொழுது இவர்கள் வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்ற நிச்சயத்தை இவர்கள் கொண்டிருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர், அவருடைய வருகையின் நாள் மட்டுமாக நாங்கள் முத்திரையிடப்படுகிறோம். 162. நாங்கள் தாழ்மையுடன் காத்துக்கொண்டிருந்து, அவர்கள் பெந்தெகோஸ்தே நாளில் இருந்தது போன்று பாடல்களைப் பாடிக்கொண்டும், துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டும், அவரை ஆவியிலே ஆராதித்துக்கொண்டும், பரிசுத்த ஆவி இவர்கள் மேல் வரும்படியாக காத்துக்கொண்டும் இருக்கையில், இதை அருளும், கர்த்தாவே. இவர்களை ஆசீர்வதியும், கர்த்தாவே. இவர்கள் இந்தச் செய்தியின் கனிகளாகவும், உமது ஆவியானவர் மேலே பீடத்திடம் கொண்டு வந்திருக்கும் விளைபொருட்களாகவும் இருக்கிறார்கள். "என்னிடத்தில் வருபவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.' கர்த்தாவே, இதோ இவர்கள் தங்கள் கரத்திலே அழைப்பிதழோடும் கூட வாசலண்டையிலே காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அங்கியைத் தரிப்பியும், கர்த்தாவே. இதை அருளும். தேவனே, நாங்கள் காத்துக்கொண்டிருக்கையில், இரக்கமாயிரும். 163. இங்கேயிருக்கும் இவர்களுக்காக இப்பொழுது யாவரும் ஜெபத்தில் இருக்கிறார்கள். என்னை அருகில், அருகாமையில் இழுத்துக்கொள்ளும், கர்த்தர்... 164. இந்த ஜனங்கள் மேல் பரிசுத்த ஆவியை நாம் பெற்றுக்கொள்வது மட்டுமாக நாம் இப்பொழுது ஆவிக்குள்ளாக பாடுவோம். நான்... உம்முடைய சுகமாக்கும் வல்லமை... 165. கர்த்தாவே, நான் இவர்களை உம்முடைய கரங்களுக்குள் ஒப்புவிக்கிறேன், கர்த்தாவே. இதை அருளும் பிதாவே, உமது மகிமைக்காக, அப்படியே இதைச் செய்யும், செய்தருளும் கர்த்தாவே, இதை அருளும், கர்த்தாவே. 56 GOD'S PROVIDED WAY தேவனால் அருளப்பட்ட பாதை 57